/indian-express-tamil/media/media_files/2024/10/16/W6MTzGKcH1XMJg5OfHSV.jpg)
தொடர் மழை காரணமாக திருப்புவனம் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இது தொடர்பான கண்ணைக் கவரும் கழுகு பார்வை புகைப்படங்களை இங்குப் பார்க்கலாம். | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
/indian-express-tamil/media/media_files/2024/10/16/S3Q0eUh0RrQFAUOYgAT8.jpg)
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன. | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
/indian-express-tamil/media/media_files/2024/10/16/LMDLzd1gaXQGfp464duQ.jpg)
மதுரை வைகை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாத நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை நீர் வைகை ஆற்றில் சேர்கிறது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
/indian-express-tamil/media/media_files/2024/10/16/W6MTzGKcH1XMJg5OfHSV.jpg)
ஆற்றின் குறுக்கே அருப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி இரு கரைகளையும் தொட்டு மழை நீர் ஆர்ப்பரித்து சென்ற வண்ணம் உள்ளது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
/indian-express-tamil/media/media_files/2024/10/16/XQZm7dg6m6GRggXRj6hA.jpg)
இந்த மழை மேலும் 10 நாட்கள் தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், அருகில் உள்ள கண்மாய்கள் நிரம்பும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
/indian-express-tamil/media/media_files/2024/10/16/W6MTzGKcH1XMJg5OfHSV.jpg)
தற்போது திருப்புவனம் வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் கண் கவரும் கழுகு பார்வை புகைப்படங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.