சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடம்: முதல்வர் பெருமிதம்

இந்தியாவில் மிகச் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ, ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் .

By: Updated: October 31, 2020, 11:00:59 PM

மாநிலத்தை அபிவிருத்தி செய்வதற்கான அர்ப்பணிப்பு, தொய்வில்லாத முயற்சிகள் காரணமாக  நாட்டில் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “ தமிழ்நாடு  இந்தியாவின் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.   மாநில வளர்ச்சிக்கான நமது  அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியின் விளைவாக இது அமைந்திருக்கிறது. இந்தியாவில் மிகச் சிறந்த நிர்வாகங்களை அளிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ, ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் ” என்று தெரிவித்தார்.

 

அக்டோபர் 30 ஆம் தேதி பப்ளிக் அஃபையர்ஸ் மையம்  வெளியிட்ட 2020 வருட பப்ளிக் அஃபையர்ஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் பெரிய மாநிலங்கள் பிரிவில், கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 0.912 புள்ளிகளை பெற்ற தமிழகம் இரண்டாவது இடத்திலும், 0.531 புள்ளிகள் பெற்ற ஆந்திரா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடைசியில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn rated one of best governed states says cm palaniswami

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X