Advertisment

39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள்; திருச்சியில் 3,369: வாக்கு மையத்தில் கலெக்டர் ஆய்வு

தமிழகத்தில் 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
  TN register 8400 postal votes in 39 constituencies and 3369 in Trichy Collector inspection at polling station Tamil News

திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Trichy: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.

இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி வரை '12-டி' படிவத்தை வீடு வீடாக வழங்கினர். 

பின்னர் அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 8-ந்தேதி முதலும், போலீசாரிடம் கடந்த 11-ந்தேதி முதல் 137 பேர் வரையிலும் தபால் வாக்கு பெறும் பணி நடந்தது.

திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருச்சியில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டார். நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 ஐ முன்னிட்டு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள தபால் வாக்குகளை 38 மாவட்டங்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், இன்று (17.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) / ஒருங்கிணைப்பு அலுவலர் தபால் வாக்குச்சீட்டு செந்தில்குமாரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ந.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment