Advertisment

தமிழகத்தில் கட்டிடங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: முத்திரைத் தாள் கட்டணம் உயரும்

PWD New Order: சொத்துப் பரிமாற்றங்களின்போது கூடுதல் முத்திரைக் கட்டணம் தவிர்க்க இயலாது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் கட்டிடங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: முத்திரைத் தாள் கட்டணம் உயரும்

TN Registration tamil news: தமிழ்நாடு முழுவதும் கட்டிடங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சொத்துப் பரிமாற்றங்களின்போது முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது.

Advertisment

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது, நிலத்தின் மதிப்புடன் கட்டிடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். இந்த கட்டிடங்களை, எப்படி மதிப்பிட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வரையறை செய்து வருகிறது.

நிலங்களைப் போல கட்டிடங்களுக்கும் இந்த ஆண்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கட்டுமானங்களுக்கு 20 சதவீதம் மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர்,மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் இது தொடர்பாக அறிவிக்கையை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

சென்னையில் கான்கிரீட் கூரை கட்டிடத்துக்கு தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325 என்றும் இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பழங்கால கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,215, முதல் தளத்துக்கு ரூ.7,470, 2-ம் தளத்திற்கு ரூ.7,830 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம் கூடுதலாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கோவை, மதுரை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 சதவீதமும், கொடைக்கானல், நீலகிரி, ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் 15 சதவீதமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை கடந்த 16 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதுவே இனி அமலில் இருக்கும். எனவே சொத்துப் பரிமாற்றங்களின்போது கூடுதல் முத்திரைக் கட்டணம் தவிர்க்க இயலாது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment