ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தமிழகத்தில் 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழக அரசு வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தமிழகத்தில், 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஏப்ரல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“