தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த முகநூல் பக்கத்தை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இதில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு தகவல்கள், பள்ளி பாடம் தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்படும்.
இந்நிலையில் நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பக்கம் ஹேக் செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்ட சினமா வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்தி காட்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்து முடக்கப்பட்டுள்ளது. சினிமா காட்சிகள் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டு மாணவர்கள், பெற்றோர் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதையடுத்து இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை முகநூல் பக்கம் முடக்கப்பட்டது குறித்து மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் இதே போல் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலின் முகநூல் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தாக
பின் தொடர்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேனல் நிர்வாகம் பேஸ்புக் நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“