அனிதாவை நினைவுக் கூறும் ’அனிதா சாட்லைட்’...கண்டுபிடித்தது யாரென்று தெரியுமா?

அனிதாவை நினைவு கூறும் வகையில், ஓவியா இந்த மினி சாட்டிலைட்டிற்கு அனிதா என்று பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

தமிழக பள்ளி மாணவி கண்டுப்பிடித்த ‘அனிதா சாட்’ என்ற மினி  சாட்லைட் தனது கவுன்ட் டவுனை எண்ணிக் கொண்டிருக்கிறது.

திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த +2 மாணவி வில்லட் ஓவியா உருவாக்கியுள்ள செயற்கை கோள், மெக்சிகோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சித் தளத்தில் இருந்து, மே மாதம் 6 ஆம் தேதியன்று, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த சாட்டிலைட்  குறைந்த எடை கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடைகொண்ட செயற்கை கோளை ஒன்றை வில்லட் ஓவியா உருவாக்கியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற  தனியார் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி  சாட்டிலைட் தயாரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவி ஓவியா இந்த சாட்டிலைட்டிற்கு’ அனிதா’ என்று பெயரிட்டுள்ளார்.

நீட் தேர்வினால்  மருத்துவர் கனவு பறிபோனதை எண்ணி தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் பள்ளி மாணவி அனிதாவை நினைவு கூறும் வகையில், ஓவியா இந்த மினி சாட்டிலைட்டிற்கு அனிதா என்று பெயர் சூட்டி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

மெக்சிகோவிலிருந்து இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவ அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து சமீபத்தில் தலைலை செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை ஓவியா நோரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மினி அனிதா சாட்டிலைட்டிற்கான கவுண்ட்டவுனை அமைச்சர் செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.  இதுக் குறித்து, மாணவி ஓவியா பேசியதாவது, “ வளிமண்டலத்தில் காற்றில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்ய பயன்படும் வகையில் இந்த சாட்டிலையை கண்டுப்பிடித்துள்ளேன். உலகில் சவாலாக இருப்பது புவி வெப்பமயமாதல். இதனால் பல்வேறு விளைவுகளை நம் சந்தித்து வருகிறோம். குறிப்பாக நமது புவி வெப்பமயமாதலின் காரணமாக எந்த அளவிற்கு மாசுபட்டுள்ளது.  இனி வரும் காலங்களில் அனிதா சாட்டிலைட் இந்த பிரச்சனைக்கு பெரிதளவில் உதவும்” என்று கூறினார்.

மாணிவி ஒவியா, இப்போது நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close