கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் மூடப்பட்டு இருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வீடியோ வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வந்துவிட்டது. அதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான அறிவிப்பை ஜனவரி 4-ம் தேதி வெளியிட்டது. மேலும், அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களிடம் ஜனவரி 8-ம் தேதிக்குள் கருத்துகளை கேட்டு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் அறிவிப்புபடி, பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 5,200-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள், 7,400-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று முதல் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 6, 7 ஆகிய இரண்டு நாட்களாக அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களை அந்தந்த பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tn schools may reopen after pongal 95 per cent parents support to school reopen
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!