/indian-express-tamil/media/media_files/IDDkysbM86k1e0CSfA82.jpg)
தமிழ்நாடு காவல்துறையில் மூத்த டி.ஜி.பி ரேங்கில் இருந்த பிரஜ் கிஷோர் ரவி ராஜினாமா
தமிழ்நாடு காவல்துறையில் மூத்த டி.ஜி.பி ரேங்கில் இருந்த பிரஜ் கிஷோர் ரவி தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி அடுத்து காங்கிரசில் இணைந்து, நாடாளுமன்ற தேர்தலில், தன் சொந்த மாநிலமான பீகாரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் மூத்த டி.ஜி.பி. அதிகாரி ரேங்கில் இருந்த பிரஜ் கிஷோர் ரவி தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்தியக் காவல் பணியில் 1989 ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், ஓய்வுபெறுவதற்கு இன்னும் மூன்று மாதம் பணி காலம் மீதமுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அடுத்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான பீகாரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஜி.பி/காவல் படைத் தலைவர் பதவிக்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) சமீபத்தில் செய்த டி.ஜி.பி-கள் குழுவில், ரவி மூன்று பேர் கொண்ட குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சஞ்சய் அரோரா, தமிழ்நாடு 1988- ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி முதல் இடம் பிடித்தார். இவர் மத்திய அரசு பணிக்காக தற்போது டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ளார்.
தற்போது டி.ஜி.பி-யாகவும், டான்ஜெட்கோ விஜிலென்ஸ் அதிகாரியாகவும் உள்ள பிரஜ் கிஷோர் ரவி அரசியலில் சேரும் இரண்டாவது டி.ஜி.பி ரேங்கில் உள்ள அதிகாரி ஆவார். சமீபத்தில், பீகாரைச் சேர்ந்த, கருணா சாகர், 1991-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஓய்வு பெற்ற பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். தற்போது ஆர்.ஜே.டி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார். இவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
காவல்துறையில் தனது 34 ஆண்டுகளுக்கு மேலான மேலான பணிக் காலத்தில், பிரஜ் கிஷோர் ரவி போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பதக்கத்தை இரண்டு முறை வென்றுள்ளார். அவர் மத்திய அரசுப் பணிக்காக சென்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினார். இவர் பீகாரில் காங்கிரஸுடன் தொடர்புடைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதை உறுதிப்படுத்திய பிரஜ் கிஷோர் ரவி, “விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறையில் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட திறன்களில் நான் பணியாற்றியதால் இது எனது பணியில் பிரதிபலிக்கிறது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.