/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-18T120300.429.jpg)
சங்கத்தின் 60வது ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு பெற நடவடிக்கைகள் எடுப்பேன்” என உறுதி கூறினார்.
Thiruvananthapuram Tamil Sangh function : திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் 60வது ஆண்டு விழாவில் தமிழ்நாட்டின் சபாநாயகர் மு. அப்பாவு கலந்துகொண்டார். விழாவில் மனோன்மணியம் பெ சுந்தரனார் உருவப் படத்தை அவர் திறந்துவைத்தார்.
தொடர்ந்து, “சங்கத்தின் 60வது ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு பெற நடவடிக்கைகள் எடுப்பேன்” என உறுதி கூறினார்.
மேலும், ஆலப்புழையில் பிறந்து, திருவனந்தபுரம் மன்னர் கல்லூரியில் தத்துவம், தமிழ் இலக்கியம், வரலாற்றிலும் முதன்மையாக விளங்கிய சுந்தரனாரின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து குறிப்பிட்ட மு.அப்பாவு, திருநெல்வேலியில் மனோன்மணியம் பெ சுந்தரனார் நினைவாக கருணாநிதி பல்கலைக்கழகம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார்.
செய்தியாயர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.