Advertisment

TN SSLC 10th Result 2018: 10ம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி. ஜூன் 28ம் தேதி மறுதேர்வு

TN SSLC 10th Result 2018, Tamil Nadu Board SSLC Result 2018 Live Updates: 2018ம் ஆண்டின் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN SSLC 10th Result 2018 Live

TN SSLC 10th Result 2018 Live

TN SSLC 10th Result 2018 Live Updates: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 9.30 மணி முதல் மாணவர்கள் இணையதளத்தில் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. இறுதியாக ஏப்ரல் 20ம் தேதி தேர்வு நிறைவடைந்தது. இந்த ஆண்டின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, சுமார் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகள் இத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனித் தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர்.

சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும். வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் முழூவீச்சில் நடந்து முடிந்துள்ளது. மதிப்பெண்களை மீண்டும் சரிபார்த்து இணையதளத்தில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவகிறது.” என்று கூறியிருந்தார்.

இந்தத் தேர்வின் முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் மற்றும் மதிப்பெண்கள் பற்றிய விரிவான அப்டேட்களுக்கு உங்களுக்காக:

TN SSLC 10th Result 2018 Live : 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 94.5% மாணவர்கள் தேர்ச்சி!

காலை 10.25: 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

,

காலை 10.02: தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க ஆலோசனை உதவி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சோர்வடைந்துள்ள மாணவர்கள் 104 அல்லது 14417 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

காலை 9.51: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் தேர்ச்சி பெற்ற விவரங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதில் அரசு பள்ளிகள் 91.36% தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் மொத்தம் 98.79% தேர்ச்சி அடைந்துள்ளது.

,

காலை 9.46: பத்தாம் வகுப்பு போதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வகைப்பாடு விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

,

காலை 9.30: தமிழகத்தில் மொத்தம் 5,456 அரசு பள்ளிகளில் 1,687 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சிபெற்றுள்ளது.

,

காலை 9.25: 2018ம் ஆண்டின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

,

காலை 9.20: 10ம் வகுப்பு தேர்வை மொத்தம் 9.5 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 8.97 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காலை 9.10: தமிழகத்தில் 10 வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்பு.

,

காலை 9.05: தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 28ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு.

,

காலை 9.00: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன். இதில் தமிழ் - 96.42% , ஆங்கிலம் - 96.50% , கணிதம் - 96.18% ,  அறிவியல் - 98.47% ,  சமூக அறிவியல் - 96.75% என தமிழகத்தில் மொத்தமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

,

காலை 8.58: சிவகங்கை மாவட்டம் முதல் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தில் மற்றும் விருதுநகர் 3ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

,

காலை 8.54: தேர்வு முடிவுகள் வெளியிட்டார் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

காலை 8.00: தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. முடிவுகள் குறித்து சந்தேகம் உள்ள மாணவர்கள் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment