பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது – தமிழக நிதித்துறை செயலாளர் பேட்டி

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் மாநிலத்தின் வரிவிதிப்பு அல்ல. கடந்த ஆண்டு நாங்கள் மாநில அரசு வரியை மாற்றி அமைத்தபோது மத்திய அரசு வரியை கனிசமாக உயர்த்தினார்கள் தமிழக நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By: Updated: February 23, 2021, 06:04:39 PM

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநில நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மாநிலம் கடன் வாங்கும் தன்மையானது மொத்தம் 95 ஆயிரம் கோடி ரூபாய். அந்த அடிப்படையில் இந்த நிதி ஆண்டை இந்த அரசு சமாளித்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 5 சதவீதம் என்ற உச்ச வரம்பு 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அடுத்த நிதி ஆண்டிற்கு அந்த கடன் வாங்கும் தன்மையும் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பு என்கிற அடிப்படையில், வரிவசூலில் அதிகரிப்பு ஏற்படும் என்கிற ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் மேலும் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கக்கூடிய அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது இடைக்கால வரவு செலவு திட்டம் என்பதன் பொருள் என்னவென்றால், புதிய திட்டங்களுக்கு அல்லாமல் நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, இரண்டாவதாக எந்தவொரு புது வரியையும் விதிக்காமல், ஏற்கெனவே இருக்கக்கூடிய வரி விகிதங்களில் வருவாயின் கணக்கெடுப்பு. இந்த இரண்டு கணக்கெடுப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அடுத்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிதி நிலை அறிகை இந்த நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், நாங்கள் வோட்டன் அக்கவுண்ட் என்று சொல்லப்படுகிற உடனடி செலவுகளுக்காக நிதியைக் கோர உள்ளோம். அது ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் கிட்டத்தட்ட 6-7 மாதங்களுக்கு தேவையான செலவினத்தை ஏற்றுக்கொள்வதற்காக அந்த வோட்டன் அக்கவுண்ட் பெறப்பட உள்ளோம். அதற்குதான் துணைமுதல்வர் சட்ட மசோதவை அவைமுன் வைத்துள்ளார். இது ஒரு மேலோட்டமான ஒரு காட்சி.

கேள்வி: மாநிலத்தின் கடன் அளவு ஒரு சர்ச்சையாகிக்கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு 2.5 லட்சம் கோடி, இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது பற்றி…

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: கடன் என்பதன் அளவு வளரும். அதே நேரத்தில் பொருளாதாரமும் வளரும். அதனால், நீங்கள் கணக்கீடு செய்வது என்பது 5 லட்சம் கோடியாக வளர்ந்துவிட்டது. இப்போது ஒரு லட்சம் கோடியாக வளர்ந்துவிட்டது என்று கணக்கீடு செய்தீர்கள் என்றால், அதே நேரத்தில் நமது மாநிலத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியும் வளர்ந்துகொண்டே வருகிறது. அந்த அடிப்படையில்தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அது வளர்ந்துகொண்டு வரும்போது, அந்த சதவீதம் சரியாக இருக்கிறதா? இல்லையா என்று நீங்கள் பார்க்க வேண்டும். போன, 14வது நிஷி கமிஷன் என்ன சொல்லியிருதாரக்ள் என்றால் கடன் சதவிகிதத்தை 25 சதவிதத்துகுள் கட்டுப்படுத்த வேண்டும்.

இப்போது 15ஆவது நிதிக்குழு இந்த கணக்கீடுகளை எல்லாம் செய்து, பட்ஜெட் உரையிலேயே குறிப்பிட்டு இருக்கிறோம். அவர்கள் ஒரு புது அளவை சொல்கிறார்கள். புது நீங்கள் 28-29 சதவீதம் வரை போகலாம் என்று சொல்கிறார்கள். ஒரு புது குறியீட்டு அளவு சொல்கிறார்கள். இப்போது மாநிலத்தின் மொத்த கடன் அளவானது அந்த குறியீட்டின்படி தான் இருக்கிறது. அதை தாண்டி போகவில்லை. அதற்குள்ளேயே தான் இருக்கிறது.

இரண்டாவது முக்கியமானது நீங்கள் என்ன பார்க்க வேண்டுமென்றால், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக கடன் வாங்குவது என்பது மாநில உற்பத்தியில் ஒரு பகுதி 3% அந்த கணக்கீட்டில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதையும் தாண்டவில்லை.

மாநில அரசு கடன் வாங்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு ஷரத்து 219ன் கீழ் மத்திய அரசிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் கடன் வாங்க முடியும். நாங்களாக போய் கடன் வாங்க முடியாது. அவர்கள் வந்து ஒரு அளவு வைக்கிறார்கள். அந்த அளவுக்குள்தான் இருக்கும். அந்த வரம்பை நாங்கள் இன்னும் மீறவில்லை. அந்த வரம்புக்குள்தான் இருக்கிறோம். 14, 15வது நிதிக்குழு என்ன வரம்பு சொல்கிறதோ அந்த வரம்புக்குள்தான் இருக்கிறோம். இதுவரை நாம் அந்த வரம்பை மீறவில்லை. சில மாநிலங்கள் அந்த வரம்புக்கு மேல் கடன் வாங்கிய மாநிலங்களும் இருக்கிறார்கள். முக்கியமாக நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்றால், இந்த கடனை வாங்கி எப்பேர்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், மாநிலத்தின் வளர்ச்சி தொடர்ந்து இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும். வளர்ச்சி தொடர்ந்து இருந்தது என்றால் நீங்கள் கடன் வாங்கி அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும். வளர்ச்சி இல்லையென்றால் பிரச்னை.

கேள்வி: பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.. இப்போது கூட பார்த்தீர்கள் என்றால், அடுத்த 2 ஆண்டுகளில் இதன் மூலமாக வருவயைப் பெருக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது. வரும் காலங்களிலும் வாட் போன்ற வரிகள் கூடுதலாக விதிக்க வாய்ப்பு இருக்கிறதா?

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: 2 முக்கியமான விஷயங்கள் பார்க்க வேண்டும். பெட்ரோல் டீசல் எல்லா வரிகளும் நாங்கள் கூடுதலாக போடுகிறோம் என்று எங்கும் சொல்லவில்லை.

கேள்வி: பட்ஜெட்டில் எரிபொருட்களின் மீதான் விற்பனைவரி அடுத்து 2 ஆண்டுகளில் கனிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, மதுவிற்பனை மீதான வரிவருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உள்ளது குறித்து…

நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: அதை நீங்கள் அப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றால், நாங்கள் விலையை அதிகரிக்கவில்லை. வரியை நாங்கள் ஏற்றவில்லை. உணமையில், கடந்த மே 3, 2020-ல் அன்றைக்கு நாங்கள் தமிழ்நாட்டில் வாட் வரி முன்னால் எப்படி போட்டுக்கொண்டிருந்தோமோ அதை பெட்ரோல், டீசலில் அதை மாற்றி அமைத்தோம். முன்னாள், 25 சதவீதம் டீசல், 30 சதவீதம் பெட்ரோல் என்று ஒரு அளவு இருந்தது. அதை மாற்றி ஒரு பகுதி வந்து, பெட்ரோலுக்கு இத்தனை ரூபாய், டீசலுக்கு இத்தனை ரூபாய் என்றும் அதுபோக, 10, 12 சதவீதம் வரி என்று போட்டோம். இதற்கு முக்கியமான நோக்கம் என்ன? விலை உயரும்போது 30 சதவீதம் உயர்ந்துகொண்டே போகும். அரசுக்கு வரி நிறைய வரும். மக்கள் மீதும் வரிச்சுமை அதிகமாகும்.

பெட்ரோல் 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால் அதில் 30 சதவீதம் வரி என்றால் 13 ரூபாய் வரும். அதையே நீங்கள் 2 ரூபாய் வரி 2 ரூபாயாகவே இருக்கும். மீதி ரூபாய் 10 சதவீதமாக மாறும். பெட்ரோலின் அடிப்படை விலை 15 ரூபாயாக மாறினால், வரி 2 ரூபாய் அப்படியே இருக்கும். 17 ரூபாய். பிறகு, இன்னொரு வரி 1.50 ரூபாயாக மாறும். அதாவது இந்த 1 ரூபாய் வரி என்பது 15 ரூபாயில் 10 சதவீதம் என்றால் 1.50 ரூபாயாக மாறும். வரி 3.50 ரூபாயாக மாறி, அதனால், பெட்ரோல் அடிப்படை விலை 15 ரூபாயாக இருந்தால் பெட்ரோல் விலை 18.50 ரூபாயாக மாறும். இதுவே அந்த 30 சதவீதம் வரியாக இருந்திருந்தால், பெட்ரோலின் அடிப்படை விலை 15 ரூபாயில் 30 சதவீதமாக வந்துவிடும். அதனால், 19.50 ரூபாயாக வரும். அதனால், அந்த முறையில் தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு மே மாதம் இதே காரணத்துக்காக மாற்றி அமைத்தோம். இதில் இன்னொரு கூடுதல் நன்மையும் உள்ளது. பெட்ரோல் விலை குறைந்தால், மாநிலத்தின் வருவாயும் பாதுகாக்கப்படும். அதனால், அந்த 10 ரூபாயாக இருக்கிற விலை 8 ரூபாயாக குறைந்தது என்றால், அல்லது 5 ரூபாயாக குறைந்தது என்றால் நாங்கள் அதே 2 ரூபாயை வரியாக வாங்குவோம். அந்த அடிப்படையில் எங்களுக்கு வரக்கூடிய வருமானம் குறையாது. விலை ஏறும்போது மக்கள் மீது ஏற்படக்கூடிய வரிச்சுமை கூடுதலாக போகாது.

கேள்வி: எப்படி பார்த்தாலும் பெட்ரோல் விலை 93 ரூபாய் வந்துவிட்டதே?

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: அதற்கு காரணம் மாநிலத்தின் வரிவிதிப்பு அல்ல. கடந்த ஆண்டு நாங்கள் மாநில அரசு வரியை மாற்றி அமைத்தபோது மத்திய அரசு வரியை கனிசமாக உயர்த்தினார்கள். மே, 2020-ல் அவர்களுடைய (மத்திய அரசு) வரி சதவீத அதிகமாகப் போய்விட்டது. அவர்கள் 2 விஷயங்களை செய்தார்கள். ஏற்கெனவே இருக்கிற வரியைக் குறைத்துவிட்டு, வரியை உயர்த்தினார்கள். அதாவது யூனியன் எக்சைஸ் டியூட்டி என்று போட்ட வரியை மாற்றி செஸ் என்று போட்டுவிட்டார்கள். அதனால், என்ன ஆனது என்றால், மாநிலங்களுக்கு அதிலிருந்து வரக்கூடிய வருமானமும் குறைந்துபோய்விட்டது. அதை ஏற்கெனவே பட்ஜெட் உரையிலும் சொல்லியிருக்கிறோம். அவர்களின் வரி என்பது 20 ரூபாயாக இருந்தது 30 ரூபாயாக மேலே போனது. எங்களுடைய வரி அப்படியே இருந்தது. அல்லது அதைக்காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே வந்தது.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கு ஏதாவது வழி இருக்கா?

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: அது என்னுடைய முடிவு இல்லை. அந்த விவரம் நான் சொல்லத் தயாராக இல்லை. எல்லா நேரத்திலும் சொல்வது, மாநிலத்தினுடைய வரிவிதிப்பினால், இந்த விலை உயர்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நாங்கள் உண்மையில் வரியை மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய வகையில்தான் சென்ற ஆண்டு மே மாதம் மாற்றி அமைத்தோம். மத்திய அரசு பொறுத்த அளவில் அவர்கள் வந்து தனியாக வரியை அதிகரித்தார்கள். அது ஒரு பிரச்னையாக போய்க்கொண்டிருக்கிறது. இரண்டாவது மத்திய அரசு விதித்த வரியை வந்து அவர்கள் எக்ஸைஸ் டியூட்டி காம்ப்பிரிண்ட் எக்ஸைஸ் டியூட்டி என்று போட்டால் அதை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அதை எக்ஸைஸ் டியூட்டியில் இருந்து அவர்கள் செஸ்ஸாக போட்டார்கள். அதனால், அவர்கள் வந்து அந்த வருவாயை வைத்துக்கொள்கிறார்கள். ஏற்கெனவே பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கிறோம். ஏப்ரல் – நவம்பர் 2020ல் அவர்களுக்கு பெட்ரோல் டீசலில் 48 சதவீதம் வருவாய் கூடியிருக்கிறது. ஆனால், அதே காலகட்டத்தில் மாநிலங்களுக்கு வரக்கூடிய அதே பங்கில் 39 சதவீதம் குறைந்திருக்கிறது.

நிதிக்குழுவின்படி, மத்திய வரிகளில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மத்திய வரியில். செஸ் வரி மேல் வரி கூடுதல் கட்டணம் என்கிற வரி போட்டால் அதை அவர்கள் பகிர்ந்தளிக்க வேண்டிய தேவையில்லை. அது அவர்களுடைய வருவாயாக நின்றுவிடும். அதைத்தான் அவர்கள் 15வது நிதிக்குழு அறிக்கையிலும் காட்டியிருக்கிறார்கள். செஸ் அண்ட் சர்சார்ஜ் என்பது 2012-13-ல் 10 சதவீதமாக இருந்தது. இப்போது, 20 சதவீதமாக ஆகியிருக்கிறது. இதன் பொருள் 90 ரூபாயில் இருந்து 41 சதவீதம் அதிகமா, 80 ரூபாயில் இருந்து 41 சதவீதம் அதிகமா அதுதான் கணக்கு.

கேள்வி: மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய வரி வருவாய் எப்படி கொடுக்கிறார்கள்?

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: அதாவது வரி வருவாய் வழக்கமாக வந்துவிடும். அதில் பிரச்னை இல்லை. ஆனால், அந்த அளவுதான் குறைகிறது. அதாவது 41 சதவீதம் தமிழ்நாட்டுக்கு 4.189% வரவேண்டும். இந்த நிதி ஆண்டைப் பொறுத்த அளவில், முதலில் நாங்கள் கணக்கிட்டது 32 ஆயிரம் கோடி ரூபாய் கிட்ட கணக்கிட்டோம். மத்திய வரி வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது பட்ஜெட் போடும்போது மத்திய அரசு பட்ஜெட்டில் எங்களுக்கு போட்டுக்கொடுத்த தொகை 32 ஆயிரத்து 849 கோடி ரூபாய். இப்போது அவர்களுடைய பட்ஜெட்டிலேயே 23 ஆயிரத்து 39 கோடி ரூபாயாக குறைத்திருக்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகை குறைந்திருக்கிறது. அவர்கள் பட்ஜெட்டில் என்ன போடுகிறார்களோ அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் பட்ஜெட்டில் கொடுப்பதையே குறைத்திருக்கிறார்கள்.

கேள்வி: இதனால், மாநில அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா?

தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்: அதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன். இந்த நிதி ஆண்டில், பல்வெறு விதங்களில் நமக்கு வரக்கூடிய நமது மாநிலத்தின் வருவாயும் குறைந்திருக்கிறது. ஏனென்றால், அவர்களுடைய வரிவருவாயும் குறையுமில்லையா? எங்களுக்கு வரிவருவாய் குறைந்திருப்பது போல அவர்களுடைய வரி வருவாயும் குறையும்.

இந்த நிதி ஆண்டைப் பொறுத்த அளவில், வரிவருவாய் குறைந்திருந்தாலும் அதை சரி செய்வதற்காக அதை ஈடு செய்வதற்காக கூடுதலாக கடன் பெற்று, அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn state finance secretary krishnan press meet central govt increased petrol diesel tax not state govt

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X