Advertisment

பல கோடி வர்த்தகம் பாதிப்பு; அரசு எங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்: கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம்

15 கோரிக்கைகளை வைத்துள்ளோம். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - சின்னசாமி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu

TN stone quarry, crusher and lorry owners association strike

தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில்களுக்கு அமல்படுத்திய காரணத்தால் குவாரிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.

Advertisment

அதன் காரணமாக தொழிலை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என ஊடகங்களில் செய்திகள் வருவதால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்சினைகள் வந்ததில்லை. தற்போது புதிதாகப் பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தூண்டுதல் பெயரில் போராட்டம் இல்லை

எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வேலை நிறுத்தத்தில் யாருடைய தூண்டுதல் பெயரில் நடைபெறவில்லை. எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பலமுறை நிறைவேற்றி உள்ளது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

publive-image
Tamil Nadu Stone Quarry, Crusher and Lorry owner’s association, State president K Chinnaswamy

தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டால் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது. தற்போது சில குவாரிகள் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த குவாரிகள் 20, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது திடீரென அபராதம் விதிப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

15 கோரிக்கைகளை வைத்துள்ளோம். பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து பல்வேறு குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment