Advertisment

நகராட்சி, பேரூராட்சிகளில் பலத்தை நிரூபித்த திமுக; தடுமாறிய அதிமுக

திமுக - அதிமுக இடையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால், பெரும்பாலும் அதிகப்படியான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
நகராட்சி, பேரூராட்சிகளில் பலத்தை நிரூபித்த திமுக; தடுமாறிய அதிமுக

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று, காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Advertisment

நகராட்சி முன்னிலை நிலவரம்

138 நகராட்சியில் மொத்தமாக 3,842 வார்டுகள் உள்ளன. இதில் 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி கட்சிகளில் 1356 பேரும், அதிமுக கூட்டணியில் 518 பேரும், மற்றவையில் 161 பேரும் முன்னிலையில் உள்ளனர். வால்பாரை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - நேரம்: மதியம் 2 மணி

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக 1,228 இடங்களிலும், அதிமுக 328 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது.

திமுக - அதிமுக இடையில் முன்னிலை அளவில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால், பெரும்பாலும் அதிகப்படியான நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - நேரம்: மாலை 5 மணி

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக 2310 இடங்களிலும், அதிமுக 621 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது. மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

பேரூராட்சி முன்னிலை நிலவரம்

489 பேரூராட்சியில் மொத்தம் 7,604 வார்டுகள் உள்ளன. இதில், 196 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதில், திமுக கூட்டணி 2812 வார்டுகளிலும், அதிமுக கூட்டணி 763 வார்டுகளிலும், மற்றவை 372 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - நேரம்: மதியம் 2 மணி

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக 3812 இடங்களிலும், அதிமுக 1077 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சியில் 431 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக - அதிமுக வாக்குகள் பதிவானதில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால், பெரும்பாலும் அதிகப்படியான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - நேரம்: மாலை 5 மணி

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நகராட்சி வார்டுகளில் திமுக 4388 இடங்களிலும், அதிமுக 1207 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது. மொத்தமுள்ள 489 பேரூராட்சியில் 389 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை விகிக்கிறது.

இறுதி அறிவிப்பு

தேர்தல் நடத்தப்பட்ட 489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 434 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 20 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தன.

அதேபோல், 138 நகராட்சிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், திமுக கூட்டணி 132 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 3 இடம் மட்டுமே கிடைத்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Local Body Election Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment