Advertisment

TN Urban Local Body Election Results : 132 நகராட்சிகளை வென்றது திமுக கூட்டணி!

TN Urban Local Body Elections Results LIVE Updates 22nd February 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Urban Local Body Election Results : 132 நகராட்சிகளை வென்றது திமுக கூட்டணி!

Urban Local Body Elections Results: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

Advertisment

இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது

கொங்குவில் அ.தி.மு.க டோட்டல் டேமேஜ்: அசைன்மென்ட்-ஐ முடித்த செந்தில் பாலாஜி!

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில், இன்று(பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சென்னையை பொறுத்தவரை சுமார் 15 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு முடிவு தெரியும்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்படும் அறிவிக்கப்படும்.காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் மூடல்

மேலும், தேவையற்ற மோதல்களை தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள 268 இடங்களைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களை இன்று முழுவதும் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4ஆம் தேதி மறைமுக தேர்தல்

தொடர்ந்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ள வார்டு உறுப்பினர்கள், இந்த பதவிகளுக்கான தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:49 (IST) 22 Feb 2022
    சுயேச்சையாக வெற்றி பெற்று திமுகவில் இணைந்த பெண் வேட்பாளர்கள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வெற்றிபெற்ற கீதா முருகேசன், சுப்புலட்சுமி ஆகியோர் கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்



  • 22:48 (IST) 22 Feb 2022
    புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு

    கடலூர் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டின் 4AV வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும், இயந்திர பழுது காரணமாக மறுவாக்குப்பதிவு அறிவிப்பு வெளியிட்ப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 22:47 (IST) 22 Feb 2022
    தேர்தலில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

    மதுரை சோழவந்தான் பேரூராட்சி 9 வார்டில் வெற்றிபெற்ற அமமுக வேட்பாளர் சத்தியபிரகாஷ் அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்



  • 22:45 (IST) 22 Feb 2022
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியின்றி, தனித்தனியாக போட்டியிட்டதால், வாக்குகள் அதிகளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 20:35 (IST) 22 Feb 2022
    வாக்களித்த மக்களுக்கு டிடிவி தினகரன் நன்றி

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி. மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு பணியைத் தொடர்வோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.



  • 20:34 (IST) 22 Feb 2022
    கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்ற வெற்றி மகத்தானது - டாக்டர் ராமதாஸ்

    பணம், அதிகார அடக்குமுறையை மீறி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்ற வெற்றி மகத்தானது. பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பாமகவை பொறுத்த வரை வெற்றி, தோல்விகள் தற்காலிகம்; மக்கள் பணிதான் நிரந்தரம் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • 19:51 (IST) 22 Feb 2022
    அனைத்து புகார்களுடன் நீதிமன்றத்தை நாட உள்ளோம் - பாஜக தலைவர் அண்ணாமலை

    தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் தனித்து போட்டியிட்ட பாஜக குறிப்பிட்ட இடங்களில வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் நடத்திய விதம் வெக்கக்கேடானது.

    ஒட்டுமொத்த அளவில் அதிகார துஷ்பிரயோசம் வன்முறை நடந்துள்ளது. அனைத்து புகார்களுடனும், குறிப்பிட்ட பூத்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாட உள்ளதாக குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தின் வெளியில் திமுகவினர் நின்றுகொண்டதால மக்கள் பயந்துகொண்டு வாக்களிக்க வரவில்லை. மத்திய இணையமைச்சர் எல் முருகனின் வாக்குகூட ஒரு சிலரால் செலுத்தப்பட்டது. நாங்கள் போராட்டம் நடத்திய பின்னரே அவரை வாக்களிக்க அனுமதித்தனர் என்று கூறியுள்ளார்.



  • 19:39 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பெரும்பான்மையாக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • 19:29 (IST) 22 Feb 2022
    எடப்பாடி நகராட்சியை கைப்பற்றியது திமுக

    தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் ஆளும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல் முறையாக சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.



  • 18:49 (IST) 22 Feb 2022
    திருவண்ணாமலை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

    திருவண்ணாமலை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில், திமுக கூட்டணி 31 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 25, 35வது வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளது.



  • 18:48 (IST) 22 Feb 2022
    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசிக்கும் வார்டில் திமுக வெற்றி

    கோவை மாநகராட்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசிக்கும் 92வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் வெற்றி பெற்றுள்ளார்.



  • 18:46 (IST) 22 Feb 2022
    வேலூர் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

    வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 45ல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.



  • 18:43 (IST) 22 Feb 2022
    கோவை வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மகத்தான வெற்றி - செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. கோவையில் அதிமுக மணல் கோட்டைதான் கட்டியது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு கோவையில் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.” என்று கூறினார்.



  • 18:43 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

    பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

    மொத்த பதவியிடங்கள் 7621

    முடிவுகள் அறிவிக்கப்பட்டது 7603

    திமுக 4388

    அதிமுக 1206

    காங்கிரஸ் 368

    பிஜேபி 230

    சிபிஐ (எம்) 101

    பா ம க 73

    அமுமுக 66

    வி சி க 51

    மதிமுக 34

    சிபிஐ 26

    தேமுதிக 23

    SDPI 16

    மனிதநேய மக்கள் கட்சி 13

    முஸ்லீம் லீக் 12

    நாம் தமிழர் கட்சி 6

    புதிய தமிழகம் 3

    பகுஜன் சமாஜ் 1

    தேசியவாத காங்கிரஸ் 1

    கம்னியூஸ்ட் 1

    இந்திய ஜனநாயக கட்சி 1

    மறுமலர்ச்சி ஜனநாயக கட்சி 1

    த ம ம க 1

    சுயேட்சை 980

    நகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

    மொத்த பதவியிடங்கள் 3843

    முடிவுகள் அறிவிக்கப்பட்டது 3842

    திமுக 2360

    அதிமுக 638

    காங்கிரஸ் 151

    பிஜேபி 56

    சிபிஐ (எம்) 41

    பா ம க 48

    அமுமுக 33

    வி சி க 26

    மதிமுக 34

    சிபிஐ 19

    தேமுதிக 12

    SDPI 5

    மனிதநேய மக்கள் கட்சி 4

    முஸ்லீம் லீக் 23

    நாம் தமிழர் கட்சி 0

    புதிய தமிழகம் 1

    பகுஜன் சமாஜ் 3

    தேசியவாத காங்கிரஸ் 0

    கம்னியூஸ்ட் 1

    இந்திய ஜனநாயக கட்சி 2

    மனிதநேய ஜனநாயக கட்சி 1

    த ம ம க 0

    சமத்துவ மக்கள் கட்சி 1

    AIMEM 1

    Forward Bloc 1

    சுயேட்சை 359

    மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முடிவு

    மொத்த பதவியிடங்கள் 1374

    முடிவுகள் அறிவிக்கப்பட்டது 1299

    திமுக 894

    அதிமுக 161

    காங்கிரஸ் 68

    பிஜேபி 22

    சிபிஐ (எம்) 23

    பா ம க 5

    அமுமுக 3

    வி சி க 16

    மதிமுக 20

    சிபிஐ 12

    முஸ்லீம் லீக் 3

    சுயேட்சை 4



  • 18:28 (IST) 22 Feb 2022
    கடலூர் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

    கடலூர் மாநகராட்சியாக மாறிய பிறகு நடந்த முதல் தேர்தலில், திமுக கூட்டணி 34 வார்டுகளில் வெற்றி பெற்று கடலூர் மாநகராட்சியைக் கைப்பற்றியது. திமுக கூட்டணி 34 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பாமக 1 வார்டிலும் சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.



  • 18:23 (IST) 22 Feb 2022
    தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 70 வார்டுகளில் திமுக 48ல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8, காங்கிரஸ் 2, மதிமுக 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், தாம்பரம் மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.



  • 18:21 (IST) 22 Feb 2022
    ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டு பத்திரம் இந்த வெற்றி - கனிமொழி

    தூத்துக்குடி எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தந்த மிகச் சிறந்த பாராட்டுப் பத்திரம் இந்த வெற்றி. திமுகவை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று கூறினார்.



  • 18:01 (IST) 22 Feb 2022
    நெல்லை மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக

    நெல்லை மாநகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, களக்காடு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது. 17 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 273 வார்டுகளில் 152 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.



  • 17:38 (IST) 22 Feb 2022
    திமுக வெற்றி: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடி வருவதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக தலைவர்கள் துரைமுருகன், ஆ ராசா, அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ உதயநிதி உடன் உள்ளனர்.



  • 17:23 (IST) 22 Feb 2022
    தேர்தல் வெற்றியை திமுகவினர் அமைதியாக கொண்டாட வேண்டும்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடி வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி; திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது. இந்த மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்கு மண்டலத்தையே இன்று கைப்பற்றியிருக்கிறோம். தேர்தல் வெற்றியை திமுகவினர் அமைதியாக கொண்டாட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணியை தொடர்ந்து கண்காணிப்பேன்.” என்று கூறினார்.



  • 17:11 (IST) 22 Feb 2022
    இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை - மு.க. ஸ்டாலின்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடி வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம். நகர்ப்புற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை தேடி தந்த தமிழக மக்களுக்கு நன்றி” என்று கூறினார்.



  • 16:53 (IST) 22 Feb 2022
    திருச்சி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

    மொத்தமுள்ள 65 வார்டுகளில் 59 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 வார்டுகளிலும், அமமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது



  • 16:24 (IST) 22 Feb 2022
    கள்ளக்குறிச்சியில் திமுக முன்னிலை

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது



  • 16:23 (IST) 22 Feb 2022
    திருவண்ணாமலை நகராட்சியை திமுக கைப்பற்றியது

    திமுக கூட்டணி 31 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.



  • 16:22 (IST) 22 Feb 2022
    ராயபுரம் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.



  • 16:21 (IST) 22 Feb 2022
    உயரும் சுயேட்சைகளின் செல்வாக்கு

    கமுதியில் உள்ள 15 பேரூராட்சிகளில் 14 பேரூராட்சி வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போன்று சாயல்குடியில் உள்ள 15 பேரூராட்சி அமைப்புகளிலும் சுயேட்சைகளே வெற்றி பெற்றுள்ளனர். திட்டச்சேரி பகுதியில் 15-ல் 9 பேரூராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.



  • 15:55 (IST) 22 Feb 2022
    கரூரில் உள்ள 7 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

    அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பி.ஜே. சோழவரம், புஞ்சைத் தோட்டக்குறிச்சி, உப்பிடாமங்கலம், மற்றும் புலியூர் ஆகிய பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.



  • 15:38 (IST) 22 Feb 2022
    தூத்துக்குடியில் வெற்றியை கைப்பற்றியது திமுக

    தூத்துக்குடி மாநகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 60 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சியை தன் வசப்படுத்தியது திமுக.



  • 15:34 (IST) 22 Feb 2022
    சத்தியமங்கலம் நகராட்சியை கைப்பற்றியது திமுக

    27 வார்டுகளைக் கொண்ட சத்தியமங்கலம் நகராட்சியில் 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், பாமக மற்றும் பாஜக தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.



  • 15:33 (IST) 22 Feb 2022
    6 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

    தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக.



  • 15:31 (IST) 22 Feb 2022
    காரைக்குடி நகராட்சியை கைப்பற்றியது திமுக

    மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக 18 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.



  • 15:29 (IST) 22 Feb 2022
    கோவை மாநகராட்சி 46வது வார்டில் திமுக வெற்றி

    கோவை மாநகராட்சி 46வது வார்டில் திமுக வேட்பாளர் அன்னக்கொடி 5397 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1945 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.



  • 14:57 (IST) 22 Feb 2022
    கோவையில் திமுக ஆதிக்கம்

    அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 40ல் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 2 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.



  • 14:37 (IST) 22 Feb 2022
    பழனி நகராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றி

    பழனி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 20இல் திமுக கூட்டணி வெற்றி; அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றது.



  • 14:37 (IST) 22 Feb 2022
    பழனி நகராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றி

    பழனி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 20இல் திமுக கூட்டணி வெற்றி; அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றது.



  • 14:23 (IST) 22 Feb 2022
    தென்காசி: அண்ணன், தங்கை வெற்றி

    தென்காசி நகராட்சியில் 14,15 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்களான அண்ணன், தங்கை வெற்றி பெற்றுள்ளனர்.



  • 14:14 (IST) 22 Feb 2022
    மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

    மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 51ல் திமுக வெற்றி; அதிமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்றது.



  • 14:04 (IST) 22 Feb 2022
    கன்னியாகுமரி: மாற்றுத்திறனாளி வெற்றி

    கன்னியாகுமரி கொல்லங்கோடு நகராட்சி 11 ஆவது வார்டில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி ஃபெரோஸ் கான் வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் 303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



  • 13:57 (IST) 22 Feb 2022
    பத்மநாபபுரத்தில் திமுக-பாஜக சமபலம்

    21 வார்டுகள் உள்ள பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக மற்றும் பாஜக தலா 7 இடங்களில் வென்றுள்ளது.



  • 13:53 (IST) 22 Feb 2022
    நாகர்கோவில் மாநகராட்சி: திமுக கைப்பற்றியது

    நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 52 வார்டுகளில் 29இல் திமுகவும் அதிமுக 7 வார்டுகளிலும் வென்றது. பாஜக 7 வார்டுகளை கைப்பற்றியது.



  • 13:46 (IST) 22 Feb 2022
    பெரியகுளம் நகராட்சியில் திமுகவுக்கு வெற்றி முகம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 2 இடங்களில் வென்றது.



  • 13:46 (IST) 22 Feb 2022
    பெரியகுளம் நகராட்சியில் திமுகவுக்கு வெற்றி முகம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 2 இடங்களில் வென்றது.



  • 13:42 (IST) 22 Feb 2022
    தஞ்சாவூர் மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

    தஞ்சை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 26ல் வெற்றி; அதிமுக 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.



  • 13:24 (IST) 22 Feb 2022
    கடலூரில் ஒரு வார்டில் பாஜக வெற்றி

    கடலூர் மாநகராட்சியில் பாஜக ஒரு வார்டில் வெற்றி பெற்றது. 28வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வென்றார்.



  • 13:22 (IST) 22 Feb 2022
    ஆரணி: 21 வயது இளம்பெண் வெற்றி

    ஆரணியில் திமுகவை சேர்ந்த 21 வயது இளம் வேட்பாளர் வேட்பாளர் ரேவதி வெற்றி பெற்றார்.



  • 13:20 (IST) 22 Feb 2022
    அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம்!

    21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிப்பதை அடுத்து, திமுகவினர் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 13:13 (IST) 22 Feb 2022
    பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியது திமுக

    பரமக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 36 வார்டுகளில் 20 இல் திமுக வென்றது.



  • 13:00 (IST) 22 Feb 2022
    மணப்பாறை நகராட்சி.. கணவன், மனைவி வெற்றி!

    திருச்சி மணப்பாறை நகராட்சியில் 19 மற்றும் 20 வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தங்கமணி மற்றும் அவரது மனைவி மனோன்மணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.



  • 12:59 (IST) 22 Feb 2022
    கோவை.. 31 பேரூராட்சிகளில் திமுக வெற்றி!

    கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில், 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது.



  • 12:59 (IST) 22 Feb 2022
    கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றிய திமுக!

    கிருஷ்ணகிரி நகராட்சியில், மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 22ல் வெற்றி பெற்று, கைப்பற்றியது. அதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில், மொத்தமுள்ள 36 வார்டுகளில் 31-ல் திமுக கூட்டணி வெற்றி பெற்று, கைப்பற்றியது. தஞ்சை அம்மாபேட்டை பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 12ல் வெற்றி பெற்று திமுக வசமானது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில், மொத்தமுள்ள 27 வார்டுகளில் 17-ல் திமுக வெற்றி கைப்பற்றியது.



  • 12:59 (IST) 22 Feb 2022
    ஒரத்தநாடு பேரூராட்சி.. அமமுக வெற்றி!

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அமமுக 9 இடங்களில் வெற்றி பெற்று, தலைவர் பதவியை கைப்பற்றியது. திமுக, அதிமுக தலா 3 இடங்களில் வென்றுள்ளன.



  • 12:58 (IST) 22 Feb 2022
    திண்டுக்கல் மாநகராட்சியை தன் வசமாக்கிய திமுக!

    திண்டுக்கல் மாநகராட்சியில், மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24 இடங்களில் வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்றுகிறது.



  • 12:41 (IST) 22 Feb 2022
    ஒரே ஒரு வாக்கு மட்டுமே பாஜக வேட்பாளர்!

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11வது வார்டில், பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.



  • 12:41 (IST) 22 Feb 2022
    கோவை மாநகராட்சி.. திமுக கூட்டணி 21ல் வெற்றி!

    கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 21ல் வெற்றி பெற்றது.



  • 12:41 (IST) 22 Feb 2022
    ராமநாதபுரம் நகராட்சி.. திமுக கைப்பற்றியது!

    ராமநாதபுரம் நகராட்சியில், மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 23 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது. காங்கிரஸ் 3, மமக 1, பாஜக 1, அமமுக 1, அதிமுக 2, சுயேட்சை 2 வார்டுகளில் வென்றனர்.



  • 12:40 (IST) 22 Feb 2022
    மதுக்கூர், வீரகல்புதூர் பேரூராட்சியில் திமுக வெற்றி!

    தஞ்சை மதுக்கூர் பேரூராட்சி, சேலம் வீரகல்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது



  • 12:40 (IST) 22 Feb 2022
    அன்னவாசல் பேரூராட்சி.. அதிமுக 8, திமுக 6 இடங்களில் வெற்றி!

    புதுக்கோட்டை மாவட்டம், 15 வார்டுகளை கொண்ட அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக 8 , திமுக 6 வார்டுகளில் வெற்றி.



  • 12:40 (IST) 22 Feb 2022
    மணப்பாறை நகராட்சி.. திமுக, அதிமுக தலா 11 இடங்களில் வெற்றி!

    மணப்பாறை நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக கூட்டணி 11, அதிமுக 11, சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.



  • 12:39 (IST) 22 Feb 2022
    கரூர் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக!

    கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 24க்கும் மேல் திமுக வெற்றி பெற்று கைப்பற்றியது.



  • 12:14 (IST) 22 Feb 2022
    கோவை மாநகராட்சி.. ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி!

    கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 20ல் வெற்றி. ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி.



  • 12:13 (IST) 22 Feb 2022
    நகராட்சிகளை கைப்பற்றிய திமுக!

    ராணிப்பேட்டை சோளிங்கர், ஈரோடு சத்தியமங்கலம் மற்றும் குளித்தலை, திட்டக்குடி, மானாமதுரை நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.



  • 12:13 (IST) 22 Feb 2022
    பாமக வெற்றி!

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டு, இடங்கணசாலை நகராட்சியில் 4 வார்டு மற்றும், ஈரோடு சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளில் பாமக வெற்றி பெற்றது.



  • 12:13 (IST) 22 Feb 2022
    நகராட்சி வார்டுகள்.. திமுக கூட்டணி 1055 இடங்களில் வெற்றி!

    12 மணி நிலவரப்படி, நகராட்சி வார்டுகளில் திமுக கூட்டணி 1055, அதிமுக கூட்டணி 245, மற்றவை 214 இடங்களில் வெற்றி பெற்றது.



  • 12:12 (IST) 22 Feb 2022
    தூத்துக்குடி மாநகராட்சி.. திமுக கைப்பற்றியது!

    தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30-க்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்று கைப்பற்றியது.



  • 11:49 (IST) 22 Feb 2022
    திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி.. திமுக, சுயேட்சைகள் சரிபாதி வெற்றி!

    திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகளில் 6ல் திமுக கூட்டணி, 6ல் சுயேட்சையும், அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.



  • 11:47 (IST) 22 Feb 2022
    மாநகராட்சி.. திமுக கூட்டணி 212 இடங்களில் வெற்றி!

    நகப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. காலை 11.40 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் திமுக கூட்டணி 212 இடங்களிலும், அதிமுக கூட்டணி 35 இடங்களிலும் மற்றவை 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.



  • 11:44 (IST) 22 Feb 2022
    ஈபிஎஸ் வசிக்கும் வார்டில் திமுக வெற்றி!

    எடப்பாடி பழனிசாமி வசிக்கும், சேலம் மாநகராட்சி 23வது வார்டில் திமுக வெற்றி



  • 11:44 (IST) 22 Feb 2022
    திமுக வசமான திருவாரூர்!

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றுகிறது.



  • 11:43 (IST) 22 Feb 2022
    விஜய் மக்கள் இயக்கத்திற்கு 4வது வெற்றி!

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சி, 14 வது வார்டில்’ விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்மயில் வெற்றி பெற்றார்.



  • 11:43 (IST) 22 Feb 2022
    திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி வெற்றி!

    சென்னை மாநகராட்சி’ 99வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி 4 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான முன்னாள் ஐ.ஏ.எஸ் சிவகாமி தோல்வி.



  • 11:43 (IST) 22 Feb 2022
    அரவக்குறிச்சி பேரூராட்சி திமுக வசமானது!

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில், மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 12 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.



  • 11:31 (IST) 22 Feb 2022
    பல நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக!

    நெல்லை மணிமுத்தாறு, விழுப்புரம் மரக்காணம், கள்ளக்குறிச்சி தியாகதுருகம், கிருஷ்ணகிரி பர்கூர், நாகை வேளாங்கண்ணி பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. திண்டுக்கல் பண்ணைக்காடு, விழுப்புரம் அரகண்டநல்லூர், கடலூர் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகள் திமுக வசமானது. அதேபோல, விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.



  • 11:31 (IST) 22 Feb 2022
    மாநகராட்சி.. திமுக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள். காலை 11.20 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் திமுக கூட்டணி 293, அதிமுக கூட்டணி 42, மற்றவை 30 இடங்களில் முன்னிலையில் உள்ளன.



  • 11:19 (IST) 22 Feb 2022
    கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி.. திமுக வெற்றி!

    கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் மொத்தம் 15 வார்டுகளில் 12 வார்டில் திமுக வெற்றி பெற்று, தன் வசம் ஆக்கியது. 3ல் அதிமுக வெற்றி.



  • 11:17 (IST) 22 Feb 2022
    வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக!

    வால்பாறையில்’ 21 வார்டுகளில் 19 இடங்களில் வென்று, நகராட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக, சுயேட்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.



  • 11:17 (IST) 22 Feb 2022
    அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் வெற்றி!

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி.



  • 11:16 (IST) 22 Feb 2022
    பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக!

    ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, வாலாஜாபாத் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.



  • 11:10 (IST) 22 Feb 2022
    முதல்முறையாக விருதுநகர் நகராட்சியை கைப்பற்றிய திமுக!

    விருதுநகர் நகராட்சியில், மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, காங்கிரஸ் -8, அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி பெற்று, முதல்முறையாக திமுக கைப்பற்றியது.



  • 11:10 (IST) 22 Feb 2022
    கோவை மாநகராட்சி.. திமுக கூட்டணி 11 வார்டுகளில் வெற்றி!

    கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 11ல் வெற்றி. கோவை 4, 7, 10, 23, 31, 37, 62, 63, 76-வது வார்டுகளில் திமுகவும், 5, 71-வது வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.



  • 10:56 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - வெற்றி பெற்ற கணவன், மனைவி

    திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1 ஆவது வார்டு மற்றும் 2 ஆவது வார்டில் போட்டியிட்ட கலியபெருமாள், மலர்விழி கலியபெருமாள் தம்பதியினர் வெற்றி பெற்றனர்.



  • 10:51 (IST) 22 Feb 2022
    2வது வெற்றியை பதிவு செய்த விஜய் மக்கள் இயக்கம்

    வாலாஜாபாத் 3 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட மோகன் ராஜ் வெற்றி பெற்றார்.



  • 10:49 (IST) 22 Feb 2022
    திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி

    வேலூர் மாநகராட்சி 37 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றார்.



  • 10:45 (IST) 22 Feb 2022
    சென்னை மாநகராட்சியில் 4ல் திமுக வெற்றி

    200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 4ல் திமுக வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி 69வது வார்டில் திமுக வேட்பாளர் சரிதா வெற்றி.



  • 10:37 (IST) 22 Feb 2022
    திமுகவின் கோட்டையாக மாறிய வால்பாறை

    கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.



  • 10:24 (IST) 22 Feb 2022
    கமுதி பேரூராட்சியில் 14 வார்டுகளில் சுயேட்சை வெற்றி

    ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளனர். 1 வார்டில் பாஜக வெற்றி. 11 வார்டுகளில் ஏற்கனவே போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்



  • 10:08 (IST) 22 Feb 2022
    கோவை சமத்தூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

    கோவை சமத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8ல் திமுகவும், 4ல் காங்கிரசும் வெற்றிப்பெற்றுள்ளன.



  • 09:57 (IST) 22 Feb 2022
    புதுக்கோட்டை: விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

    திமுக - அதிமுக - பாஜக இடையே போட்டி நிலவி வந்தாலும், புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றிபெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.



  • 09:39 (IST) 22 Feb 2022
    குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி

    திருநெல்வேலி பணகுடி பேரூராட்சி 4 ஆவது வார்டில் அதிமுக, பாஜக வேப்டாளர்கள் சமமாக வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:13 (IST) 22 Feb 2022
    ஆலந்தூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை!

    சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் தாமதம். 1 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.



  • 09:10 (IST) 22 Feb 2022
    கடலூர் 1 ஆவது வார்டில் விசிக வெற்றி

    கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார்.



  • 09:08 (IST) 22 Feb 2022
    மாநகராட்சி வார்டு வெற்றி நிலவரம்

    மாநகராட்சியில் தற்போது வரை 24 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. 2 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் சுயேட்சையும் வெற்றிப்பெற்றுள்ளது



  • 08:50 (IST) 22 Feb 2022
    பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!

    கோவை மாவட்டம் பெரியநெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8-ல் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.



  • 08:48 (IST) 22 Feb 2022
    மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்

    தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.



  • 08:37 (IST) 22 Feb 2022
    போடியில் அதிமுகவினர் ரகளையால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிமுகவினர் திடீர் ரகளையால் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை 20 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது!



  • 08:23 (IST) 22 Feb 2022
    சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    கடலூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சாவி தொலைந்ததால், 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக முகவர்கள் காத்திருக்கின்றனர். சென்னை, எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதம்



  • 08:19 (IST) 22 Feb 2022
    சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

    கடலூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் சாவி தொலைந்ததால், 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக முகவர்கள் காத்திருக்கின்றனர். சென்னை, எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதம்



  • 08:17 (IST) 22 Feb 2022
    சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைப்பு

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோயில் தனியார் கல்லூரியில் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டது.



  • 08:17 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 218 பேர் போட்டியின்றி தேர்வு

    தமிழகத்தில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



  • 08:11 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 218 பேர் போட்டியின்றி தேர்வு

    தமிழகத்தில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



  • 08:03 (IST) 22 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன



Tamilnadu Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment