Advertisment

நீர் வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா 2-வது நாளாக நேரில் ஆஜர்: ஆவணங்கள் கேட்ட இ.டி

தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத் துறை அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் ஆஜர்.

author-image
WebDesk
New Update
Muthaiyah.jpg

தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் (நவ.21) விசாரணைக்கு ஆஜரானார். நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2-வது நாளாக ஆஜரானார். ஆவணங்கள் சமர்ப்பிக்க அதிகாரிகள் கேட்ட நிலையில் அதனை அவர் சமர்பிப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

தமிழக அரசின் நீர்வளத் துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்கள் மற்றும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடு, அலுவலங்கள் உள்பட 34 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னையை பொறுத்தவரை எழிலகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் சோதனை நடந்தது. இதில் ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும் ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆற்று மணல் அள்ளுவதில் அரசு உயர் அதிகாரிகள் முறையான கண்காணிப்பில் ஈடுபடவில்லை என்றும், அவர்களின் ஒத்துழைப்போடுதான் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் உள்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.  அதன் அடிப்படையில்,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா 2-வது நாளாக இன்றும் ஆஜரானார்.  நேற்று அவரிடம் 10 மணி நேரம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்றும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment