புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்று இரவு முதல் காலை வரை கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், இன்று இரவு முதல் காலை வரை கவனமாக இருக்க வேண்டும்.
இந்த மழை சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், கடந்த காலங்களில் அரபிக்கடலில் ஒரு தாழ்வு நிலை உருவாகி, இது மறுபுறம் உள்ள மேகங்களை இழுப்பதன் மூலம் தொடர்ந்து 50-100 மி.மீ மழைப்பொழிவைத் தரலாம் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், KTCC (சென்னை மற்றும் 100 கி.மீ) க்கு இன்று முதல் நாளை காலை வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளது, பின்னர் நாளை மதியம் முதல் மழை வெகுவாகக் குறையும்.
உள் இழுப்பு விளைவு காரணமாக மேற்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மழை பெறும். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும். இதேப்போல் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும். என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil