தமிழ்நாட்டில் இன்று (28.11.2024) டெல்டாவில் இருந்து சென்னை வரை பகல் மற்றும் இரவில் மிதமான மழை பெய்யும் என்றும் இன்று இரவில் குளிர்காற்று வீசும் என்றும் சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 28.11.2024 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே போல, வெள்ளிக்கிழமை 29.11.2024 தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், இன்று (28.11.2024) டெல்டாவில் இருந்து சென்னை வரை பகல் மற்றும் இரவில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 29-ம் தேதியில் இருந்து மழை தீவிரம் அடையும் என்றும் நவம்பர் 30-ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் மழை தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“