Advertisment

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து ஏப்ரல் 15- ல் ரயில் மறியல், 20- ம் தேதி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஏப்ரல் 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டமும், ஏப்ரல் 20-ம் தேதி மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KS Alagiri

KS Alagiri

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 76 இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். தொழிலதிபர் அதானிக்காக பொதுத்துறைகளை பணயம் வைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு மாத காலம் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தும் என மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

Advertisment

மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற எங்களின் ஒரு மாதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் மக்களைச் சென்றடைவோம் என்றார். மாநிலத்தின் 76 மாவட்ட பிரிவுகளிலும் ஏப்ரல் 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டம், ஏப்ரல் 20-ம் தேதி மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதானியால் எஸ்.பி.ஐ-க்கு இழப்பு

சனிக்கிழமையன்று பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் நடத்திய ‘கருப்புக்கொடி’ போராட்டம் வெற்றியடைந்ததாக அவர் கூறினார். மேலும், போராட்டம் நடைபெறும் இடத்தை விட போராட்டத்தை பதிவு செய்வது முக்கியம் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

நாடாளுமன்றம் செயலிழந்ததற்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அழகிரி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பும் கடமையும் என்றார்.

அழகிரி மேலும் கூறுகையில், "எங்கள் தலைவர் ஆளுங்கட்சியிடம் விளக்கம் கேட்டார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது. ஆனால் பாஜக தரப்பில் இருந்து பதில் வரவில்லை. பிரதமர் மோடியோ அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ இது பற்றி பேச முன்வரவில்லை. அதானி குழுமத்தால் எஸ்.பி.ஐ வங்கிக்கு ரூ.54,618 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற தொழில் அதிபர்களான டாடா, பிர்லா தலைமுறை தலைமுறையாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைப் போலல்லாமல், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. இது ஒரு இயற்கையான வளர்ச்சி அல்ல. இது நாட்டுக்கு ஆரோக்கியமானதும் அல்ல" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Congress Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment