Advertisment

ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பு; தாமதமானால் தினம் ரூ100 இழப்பீடு; டான்ஜெட்கோ புதிய வழிகாட்டுதல்கள்

நுகர்வோருக்கு புதிய மின் இணைப்பை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும்; தவறினால் தினம் ரூ100 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்; டான்ஜெட்கோ புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

author-image
WebDesk
New Update
TNEB

நுகர்வோருக்கு புதிய மின் இணைப்பை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும்; தவறினால் தினம் ரூ100 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்; டான்ஜெட்கோ புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

புதிதாகத் திருத்தப்பட்ட தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானச் சட்டத்தின்படி, புதிய இணைப்புக்கு விண்ணப்பித்தவர்கள் ஒரு வாரத்திற்குள் நுகர்வோர் மின் இணைப்புகளைப் பெறுவார்கள் அல்லது அதிகபட்சமாக 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 வீதம் இழப்பீடு வழங்குமாறு டான்ஜெட்கோவிடம் (​​Tangedco) கோரலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களானது, புதிய மின் இணைப்புக்கு விநியோக மெயின்களின் நீட்டிப்பு அல்லது புதிய துணை மின்நிலையங்களை இயக்குவதற்கு தேவைப்படும் போது மட்டுமே ஏழு நாட்களுக்கு அப்பால் இணைப்பை தாமதப்படுத்த அனுமதிக்கிறது. அப்போதும் கூட டான்ஜெட்கோ வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசத்தை மீற முடியாது.

புதிய வழிகாட்டுதல்கள் பற்றிய பணி வழிமுறைகளை இன்னும் பெறவில்லை. எங்களுக்கு கிடைத்தவுடன், நாங்கள் விதிகளை கடைபிடிப்போம், என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது, ​​டான்ஜெட்கோ புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு சராசரியாக 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது, இது பழைய விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலமாகும். அனைத்தும் சரியாக இருந்தால் விண்ணப்பித்த ஒரிரு நாளில் புதிய இணைப்புகள் கொடுக்க களப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், முழுமையடையாத விண்ணப்பம் இருந்தால், மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. முன்னதாக, திருத்தம் மற்றும் மறு சமர்ப்பிப்புக்கான விண்ணப்பங்களைத் திரும்பப் பெற ஊழியர்கள் ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

டான்ஜெட்கோ பதிவுகள் ஏப்ரல் மாதத்தில், சில புதிய மின் இணைப்புகளை செயல்படுத்த 59 நாட்கள் வரை எடுத்ததாகக் காட்டுகின்றன. அதே மாதத்தில் 17,714 புதிய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, மீட்டர் தட்டுப்பாடு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், புதிய பணி அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும்போது, ​​மீட்டர்களை ஸ்டாக் வைத்திருக்குமாறு உதவிப் பொறியாளர்களுக்கு டான்ஜெட்கோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்சாரம் வழங்குநரான டான்ஜெட்கோ, மின் இணைப்பைத் துண்டிக்கும் முன், கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கும். பில் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்தியவுடன், ஆறு மணி நேரத்திற்குள் சப்ளை மீண்டும் வழங்கப்படும். இதற்கு முன், பணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புதிய திருத்தங்கள் துண்டிக்கப்பட்டதற்கான காரணத்தை டான்ஜெட்கோ வழங்க வேண்டும் எனக் கூறுகிறது.

கூடுதலாக, திருத்தப்பட்ட விநியோக வழிகாட்டுதல்கள் பில்களில் பைசாக்களைத் தவிர்ப்பதற்காக மின் நுகர்வுக் கட்டணங்களை ரவுண்டிங்-ஆஃப் செய்யும் நடைமுறையை நீக்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment