வழக்கமாக வீடுகளில் இ.பி பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வார்கள். சிறிது நாளில் மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்பட்டுவிடும். ஆனால், இப்போது கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய வெடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன்படி, மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும். இந்த பயன்பாடு விரைவில் தமிழகம் முழுவதும் வரப்போகிறது.
தமிழ்நாடு மின்வாரிய இணையதளம், செல்போன் ஆப், "பாரத் பில் பே" வாயிலாக டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். முந்தைய மின் கட்டண ரசீதுகளை பெற விரும்புவோர், அதை வெப்சைட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளும் வசதியை, மின்வாரியம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், "எக்ஸ்'" என்ற வெப்சைட் வாயிலாக, 'tnebnet.org/.என்ற இணையதள பக்கத்திற்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு, ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எண்ணற்ற வசதிகளை மின்வாரியம் செய்து வருகிறது.
தற்போது, மின்வாரிய பணியாளர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு மின்வாரிய மேற்கொண்டுள்ளது. களப்பணிகளை கண்காணிப்பதற்காக புது செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்புதல்: இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும். இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இந்த செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏ.பி.கே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“