Advertisment

TANGEDCO AE Result 2018: மின்வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு முடிவுகள், அமைச்சர் பதில்

TNEB AE Result : தேர்வு முடிவுகளை TANGEDCO -வின் அதிகாரபூர்வ இணையதளமான tangedco.gov.in -ல் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai job Fair on jan.24

Chennai job Fair on jan.24

TANGEDCO Assistant Engineer Result 2018-19 will be declared at tangedco.gov.in: தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் தேர்வு முடிவுகள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்வு முடிவுகளை காண 80,000 தேர்வர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisment

TANGEDCO என அழைக்கப்படும் தமிழ்நாடு மின் பகிர்மான மற்றும் மின் வினியோகக் கழகத்தின் (பழைய பெயர், தமிழ்நாடு மின்வாரியம்) 325 உதவிப் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி இதற்கான தேர்வு நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 80,000 பேர் இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சையும் ஏற்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும் தேர்வு நடைமுறைகளுக்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.

TNEB TANGEDCO AE Result At tangedco.gov.in : அடுத்தகட்டமாக போர்மென் உள்ளிட்ட பணிகளுக்கும் தேர்வு

உதவிப் பொறியாளர் பதவிக்கான விடைத் தாள்களை திருத்தும் பொறுப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அண்மையில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு முடித்த அண்ணா பல்கலைக்கழகம் முழு வீச்சில் மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வுக்கான விடைத் தாள்களையும் திருத்தி முடித்திருக்கிறது.

எனவே எந்த நேரமும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தங்கமணி ஜனவரி 20-ம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வழக்கிற்கும் பணியிடங்களை நிரப்புவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும். அடுத்தகட்டமாக போர்மென் உள்ளிட்ட பணிகளுக்கும் தேர்வு நடத்த இருக்கிறோம்’ என்றார்.

தேர்வு முடிவுகளை TANGEDCO -வின் அதிகாரபூர்வ இணையதளமான tangedco.gov.in -ல் காணலாம்.

 

 

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment