தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின்விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.

மேலும், அவசரகாலத்தை தவிர அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று பராமரிப்பு தடைக்கூடாது என்றும் துணைமின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவசர கால மின் தடையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அதில் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil