திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் 14 இணைகளுக்கு இந்து அறநிலையத்துறையின் சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.
2023-2024ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அறிவிப்பின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலியுடன், சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது எனவும், கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது எனவும், இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 14 இணைகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருமணம் நடத்தி வைத்து, மணமக்களுக்கு ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், இணை ஆணையர் (சமயபுரம்) கல்யாணி, முக்கிய பிரமுகர் வைரமணி, இந்து சமய அறிநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“