Advertisment

tnpds.gov.in இணையதளத்தில் அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி? ரூ1000 பொங்கல் பரிசு வழிமுறைகள்

TNPDS Ration Card Changes: tnpds.gov.in இணையதளத்தில் நுழைந்தவுடன் அதில், ‘சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற’ என ஒரு ‘லிங்க்’ கொடுக்கப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPDS Pongal Gift Package, TNPDS Pongal rs1000 gift, TNPDS Rice Ration Card, பொங்கல் விழா, பொங்கல் பரிசு

TNPDS Pongal Gift Package, TNPDS Pongal rs1000 gift, TNPDS Rice Ration Card, பொங்கல் விழா, பொங்கல் பரிசு

How to change TNPDS Ration Card for tamil nadu government pongal gift: பொங்கல் பண்டிகையையொட்டி 1000 ரூபாய் அரசு பரிசு எப்போது கிடைக்கும்? சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்றுவது எப்படி? என்கிற தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. முழு விவரங்களை அறிய தொடருங்கள்.

Advertisment

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைப் பொங்கலையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அது இந்த ஆண்டும் தொடர்கிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பேசும்போது இதை குறிப்பிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும். அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும் பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்’ என்றார் முதல் அமைச்சர்.

முதல் அமைச்சர் அறிவித்தபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 29-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

சுமார் ஒரு கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தால் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பொங்கல் பரிசு பெற முடியும் என அரசு அறிவித்திருக்கிறது. அதேசமயம், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற நவம்பர் 26 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை வருகிற 29-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

www.tnpds.gov.in இணையதளத்தில் நுழைந்தவுடன் அதில், ‘சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற’ என ஒரு ‘லிங்க்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை க்ளிக் செய்யவும். அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளிட்டு "பதிவு செய்" அழுத்தவும். நீங்கள் கேப்ட்சா குறியீடு உள்ளிடுவதற்காக வழிநடத்தப்படுவீர்கள். சரியான கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட பிறகு, தாங்கள் ஒரு முறை கடவுச்சொல்(லை) உடனடியாக பெறுவீர்கள். இந்த முறையில் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ள பதிவு செய்யலாம்.

 

Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment