Advertisment

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர்கள் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர்கள் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

மொத்த பணியிடங்கள் -13

உதவி பயிற்சி அலுவலர் -12

( English stenographer) 01

உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) -01

வயதுவரம்பு : பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.

கல்வித்தகுதி :

உதவி பயிற்சி அலுவலர் ( English stenographer) - 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி.

தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி

சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி

உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி)

வணிக நடைமுறையில் டிப்ளமோ மற்றும் சுருக்கெழுத்து கூடுதல் தகுதி.

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500

விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

தேர்வுக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)

தேர்வு நாள் : ஜூன் 22,2019

விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 20, 2019

மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment