Advertisment

TNPSC மூலமே பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பணியாளர் சேர்ப்பு; நன்மைகளும் சிக்கல்களும்

பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் நியமனங்கள் இனி TNPSC மூலமாகவே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

author-image
WebDesk
New Update
TNPSC Jobs: தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC conduct all public sector corporations recruitment: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் நியமனங்கள் இனி TNPSC மூலமாகவே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அரசு வேலை என்பது கனவு, லட்சியம்; அரசு வேலைக்கு இருக்கும் மவுசு காரணமாக லட்சணக்கானோர் அரசு வேலைக்காக தயாராகி வருகின்றனர். அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களைப் போல, அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் போன்றவற்றில் உள்ள பணியிடங்களுக்கும் தமிழகத்தில் மவுசு உண்டு. இந்த வேலைகளுக்காகவும், தமிழகத்தில் நிறைய பேர், அந்த வேலைகளுக்கு தேவையான கல்வி மற்றும் பிற தகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, தமிழக அரசின் அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதேநேரம், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பணியாளர் சேர்ப்பு அந்தந்த துறைகள் மற்றும் கழகங்கள் மூலமாகவே இதுவரை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், அரசுக் கழகங்கள் ஆகியவற்றுக்கான பணியாளர் சேர்க்கை தொடர்பான பணிகள் TNPSC -யிடம் ஒப்படைக்கப்படும் என்று நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், என அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு TNPSC மூலமாகவே இனி பணியாளர் சேர்க்கை நடைபெறும்.

இந்தநிலையில், இந்த நடைமுறை, அனைத்து அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்களைச் சேர்ப்பதற்கான அதிகாரம் அந்த நிறுவனங்களிடம் இருக்கும் காரணத்தால், பணி நியமனங்களில் அரசியல்வாதிகள் மற்றும், அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருக்கும். மேலும், தேவையற்ற நியமனங்களும் தேவைக்கு அதிகமான நியமனங்களும் நடைபெறும். ஆனால் இனி TNPSC மூலம் நியமனங்கள் நடைபெறும் என்பதால் இந்த சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

அதேநேரம், இந்த நடவடிக்கை மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தாங்களே சேர்த்துக் கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கின்றன. மேலும், மின்சார வாரியம், ஆவின், போன்ற ஒரு சில நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் பல ஆண்டுகளாக பலர் இந்த ஒப்பந்த பணிகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கான பணி நிரந்தம் குறித்த கேள்வி எழுகிறது. இருப்பினும், ஒரு சில சிக்கல்கள் இதில் இருந்தாலும், TNPSC மூலமே பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாளர் சேர்க்கை என்ற முடிவு வரவேற்கத் தக்கது என்று சமூக ஆர்வலர்களும் இந்த வேலைகளுக்காக தயாராகி வரும் ஆயிரக்கணக்கான தேர்வர்களும் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment