டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகராக செயல்பட்ட காவலருக்கும், பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும் ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 41 பேரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார், தமிழ்நாடு காவல்துறையில் முதல் நிலை
காவலராக வேலை செய்கிறார். இவர் குரூப் 2ஏ தேர்வு தேர்ச்சியடைய செய்வதாக
கூறி 7 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்த தேர்வில்
தன் மனைவி மகாலட்சுமியை தேர்ச்சிப் பெற வைத்து வருவாய் துறையில் வேலை