Advertisment

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகராக செயல்பட்ட காவலருக்கும், பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும் ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Exam Scam case, 2 person arrested, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, குரூப் 4 தேர்வு முறைகேடு, 2 பேர் கைது, 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி, சிபிசிஐடி, bail plea dismissed, group IV exam sacam, Group 2A exam scam, cbcid

TNPSC Exam Scam case, 2 person arrested, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, குரூப் 4 தேர்வு முறைகேடு, 2 பேர் கைது, 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி, சிபிசிஐடி, bail plea dismissed, group IV exam sacam, Group 2A exam scam, cbcid

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகராக செயல்பட்ட காவலருக்கும், பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும் ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

Advertisment

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 41 பேரை கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார், தமிழ்நாடு காவல்துறையில் முதல் நிலை

காவலராக வேலை செய்கிறார். இவர் குரூப் 2ஏ தேர்வு தேர்ச்சியடைய செய்வதாக

கூறி 7 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்த தேர்வில்

தன் மனைவி மகாலட்சுமியை தேர்ச்சிப் பெற வைத்து வருவாய் துறையில் வேலை

வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதவிர வி.ஏ.ஓ. தேர்விலும் மோசடி செய்து தன்னுடைய இரு தம்பிகளை தேர்ச்சியடைய

செய்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அதேபோல, குரூப் 2 ஏ தேர்வில் போலீஸ்காரர் ஒருவர் மூலம் 13 லட்சம் ரூபாய்

கொடுத்து வெற்றிபெற்று, சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை

செய்யும் ஆனந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tnpsc Tamilnadu Cbcid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment