2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் - 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2015 நவம்பர் 8-ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இதில் முதல் நிலை தேர்வு முடிவுகள் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் 74 பேர் தேர்வு செய்யபட்டனர். தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் இருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையத்தில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது. சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிகள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதற்கான சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.
தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டுள்ளன. குரூப் 1 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி உள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த ஸ்வப்னா என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடர்ந்து நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும்.
இது தொடர்பாக ஏற்கனவே அப்பல்லோ பயிற்சி மையத்தின் நிறுவனத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும். இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து டி. என். பி.எஸ். சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ஆகியோர் மாணவரிடம் இருந்து 15 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு
முறைகேடுகள் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்கள் அதிக அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்திற்கு எதிராக உரிய விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை.
தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி காவல்துறை சென்னை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை உரிய முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போவதற்கான சூழ்நிலை இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வழக்கை சிபிஐயின் இணை இயக்குனர் (தெற்கு) தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென கடந்த 12-ம் தேதி தமிழக அரசுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் டிஜிபி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால், இதுவரை அந்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே குரூப் -1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.