TNPSC Group 1 question paper mistakes : மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி ஒப்பு கொண்டுள்ளது. கேள்வி தாள் குழறுபடி, வெளிப்படைதன்மையில்லை இல்லாமல் நடைபெற்ற குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் மனுவில், கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 9050 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எந்த தகவலும் தரப்படவில்லை. கட் -ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறனவை. மேலும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என டி.என்.பி.எஸ்.சியிடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் கோரிக்கை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. எனவே, குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை படித்துப்பார்த்த நீதிபதி, பதில் தர முடியாத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜுடீசியல் ஆக்டிவிஷம் என்ற கேள்வி கேட்கபட்டுள்ளது. அப்படி என்றால் என்ன? இந்த ஒரு கேள்வியே இதற்கு போதுமானது. இந்த கேள்விக்கு என்ன பதில் தர முடியும் என கேள்வி எழுப்பினார்.
அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார். மேலும், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
டி.என்.எஸ்.சி'யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் மிக கடுமையான நிலையை நீதிமன்றம் எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து மனு தொடர்பாக ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க : Tamil Nadu news today live updates : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர்