தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நேற்று (செப்.14) நடைபெற்றது. 2,327 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 5,81,035 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்நிலையில், குரூப் 2 தேர்வில் ஆளுநரின் அதிகாரம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாளில் 90-வது கேள்வியாக ஆளுநர் பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது. அதில், கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.
காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.
A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.
B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.
C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.
D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.
E. விடை தெரியவில்லை. என்று கேட்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது இதுவும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“