டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 மெயின் தேர்வுகள் எப்போது ?

Prelims-ல் வெற்றி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை டிசம்பர் 24 – ஜனவரி 10ற்குள் டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

TN Government jobs

TNPSC Group 2 Main Exam : தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 11ம் தேதி நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 என்று அழைக்கப்படும் தேர்வின் முதற்கட்டமான ப்ரிலிம்ஸ் கடந்த நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. 1199 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 6,26,726 நபர்கள் தேர்வு எழுதினர்.

அதன் தேர்வு முடிவுகள் 17/12/2018 அன்று வெளியானது. தேர்வு எழுதியவர்களில் சுமார் 15000க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Group 2 Main Exam எப்போது நடைபெற உள்ளது ?

அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை தங்களின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது டி.என்.பி.எஸ்.சி. ப்ரிலிம்ஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களின் மெயின் தேர்வினை பிப்ரவரியில் எழுத உள்ளனர்.

மெயின் எக்ஸாம் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வினை எழுத பதிவு கட்டணமாக 150 ரூபாய் கட்ட வேண்டும்.

மேலும் ப்ரிலிம்ஸ்ஸில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் படிப்பு மற்றும் இதர சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

மேலும் படிக்க : டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 ப்ரிலிம்ஸ் தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது ?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 2 main exam to be held in february

Next Story
redBus : கிறிஸ்துமஸ் வருது… அரசு பேருந்து டிக்கெட் கிடைக்க கஷ்டமா இருக்கா? உங்களுக்காக தான் இந்த வசதிTamil Nadu Govt Bus on redBus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X