NEET தேர்வை தொடர்ந்து TNPSC தேர்விலும் முறைகேடு : தமிழகத்தில் தொடரும் தேர்வு முறைகேடுகள்
TNPSC Group 4 exam malpractice : நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்கள் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு, தேர்வர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 19 பேர் பல்வேறுபிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு, தேர்வர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், சில தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்கள், ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்கள் எனக்கூறப்படுகிறது. இதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குரூப் 2 தேர்விலும் முறைகேடு : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியது தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியதில் குரூப் 2 தேர்விலும் அதே போன்ற முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர், மாநில அளவில் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை துவக்கம் : இரண்டு தேர்வு மையங்களில் எழுதிய தேர்வர்கள் மட்டுமே, தரவரிசைப்பட்டியலில் எல்லா பிரிவுகளிலும் முதன்மை இடங்களை பிடித்துள்ள நிகழ்வு தொடர்பாக, விரிவான விசாரணையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.