இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்4 நிலை (கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையர்) பணிகளுக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கிநடைபெறுகிறது.
தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தி ஓஎம்ஆர் சீட்டை நிரப்ப வேண்டும். மேலும் ஹால் டிக்கெட், முகக்கவசம் (மாஸ்க்) உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலியாகவுள்ள 7301 பணியிடங்களுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வானது 38 மாவட்டம் 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் நடைபெறுகின்றது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 534 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனையாகிவருகிறது.
செஸ் ஒத்திகை போட்டியை தொடங்கிவைக்கும் உதயநிதி!
சென்னையில் 44ஆவது செஸ் போட்டிகள் அமைக்கும் அரங்குகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒத்திகை செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதனை சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில், ஏஆர் ரஹ்மான் இசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோன்றிய பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை முடக்குமாறு ஓ.பன்னீர் செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வைப்பு கணக்குகளை முடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிமுகவின் பொருளாளர் என திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து அனுப்பப்பட்ட கடிதத்தை அதிமுக கணக்குகள் உள்ள வங்கிகள் ஏற்றுக்கொண்டன என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:11 (IST) 24 Jul 2022கருணாநிதிக்கு கடலுக்குள் நினைவு சின்னம் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை - அமைச்சர் மா.சு
அமைச்சர் மா. சுப்பிரமணியன்: “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலுக்குள் நினைவு சின்னம் அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்கவில்லை; கடலுக்குள் பேனா சின்னம் அமைப்பதாக பத்திரிக்கை செய்தி மட்டுமே வெளியானது. தமிழகம் முழுவதும் இன்று 32வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது; ஒரே நாளில் 18.8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்” என்று கூறினார்.
- 20:21 (IST) 24 Jul 2022காந்தியின் வழியில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் - ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை: 5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். குடியரசுத் தலைவராக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.
குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், எனது கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும். நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது. நாட்டின் அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். காந்தியின் பாணியில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கட்சிகள் மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைய வேண்டும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் போராட்டம் உள்ளிட்ட பல வழிகளை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தேசத்தின் தந்தை அந்த நோக்கத்திற்காகச் சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.
ஆனால் காந்தி இதன் மறுபக்கம் குறித்தும் கவலைப்பட்டார். குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உரிமை உள்ளது. ஆனால், அது எப்போதும் அமைதியான காந்திய வடிவில் இருக்க வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
- 19:39 (IST) 24 Jul 2022நாட்டு மக்கள், பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - ராம்நாத் கோவிந்த்
பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை: “நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன்; தங்கள் கிராமம், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
- 19:04 (IST) 24 Jul 2022குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்கிறார்.
திங்கள்கிழமை அன்று பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவருடைய உரை அகில இந்திய வானொலியின் (AIR) முழு தேசிய நெட்வொர்க்கிலும் ஒளிபரப்பப்படும் மற்றும் இரவு 7 மணிக்கு தூர்தர்ஷன் சேனல்களில் ஒளிபரப்பப்படும்.
எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பதவியேற்கிறார்.
சனிக்கிழமையன்று தனது பிரியாவிடை உரையில், ராம்நாத் கோவிந்த் போராட்டங்கள் எப்போதும் "காந்தியன் அச்சில்" நடத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் பாகுபாடான அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்புகள் உட்பட பல அரசியலமைப்பு வழிகள் திறக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தேசத்தின் தந்தை அந்த நோக்கத்திற்காக சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார். ஆனால், அவர் மறுபக்கத்தைப் பற்றி சமமாக கவலைப்பட்டார். குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உரிமை உள்ளது. ஆனால்,அது எப்போதும் அமைதியான காந்திய வடிவில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
- 18:23 (IST) 24 Jul 2022செஸ் ஒலிம்பியாட்; பொதுமக்களுக்கு அனுமதி
சுற்றுலா தளம் போல் காட்சியளிக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகை போட்டி நடைபெறும் நிலையில், காண குவிந்த ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். வரும் 28-ம் தேதி முதல் ஆக. 10 வரை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 18:19 (IST) 24 Jul 2022செஸ் ஒலிம்பியாட்; பொதுமக்களுக்கு அனுமதி
சுற்றுலா தளம் போல் காட்சியளிக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஒத்திகை போட்டி நடைபெறும் நிலையில், காண குவிந்த ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். வரும் 28-ம் தேதி முதல் ஆக. 10 வரை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 17:55 (IST) 24 Jul 2022பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
உலக தடகள போட்டி : ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல். இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா. 88.13 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.
- 17:55 (IST) 24 Jul 2022செஸ் ஒலிம்பியாட்- 5 லட்சம் பரிசு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆட்டத்துக்கு முந்தைய இன்றைய பயிற்சி ஆட்டத்தில் 1,414 பேர் பங்கெடுக்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவர் லாரண்ட் பிரைட் உள்பட 90 நடுவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள், செஸ் போட்டியை நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
- 17:19 (IST) 24 Jul 2022நாளை எம்.பி.,யாக பதவி ஏற்கிறார் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை பதவி ஏற்கிறார்
- 16:55 (IST) 24 Jul 2022ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்; அலைமோதும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் குற்றலாத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்
- 16:45 (IST) 24 Jul 2022இந்திய கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு ஆண் குழந்தை
இந்திய கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
- 16:15 (IST) 24 Jul 2022சென்னை வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
- 16:04 (IST) 24 Jul 2022உக்ரைனில் படித்தவர்களின் எதிர்காலம்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
- 15:42 (IST) 24 Jul 202214 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: ஓ.பி.எஸ் அறிவிப்பு
14 பேரை அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக செயலாளராக கோவை செல்வராஜ், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக ஆர். தர்மர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- 15:05 (IST) 24 Jul 2022டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் இ.பி.எஸ்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
- 15:03 (IST) 24 Jul 2022டெல்லியில் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. தொற்று பரவல் சிறந்த குழு மூலம் கட்டுப்படுத்தப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
- 14:02 (IST) 24 Jul 2022அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை: 3 தனிப்படைகள் அமைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை.
இச்சம்பவத்தையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 13:29 (IST) 24 Jul 2022செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடக்கம்!
செஸ் ஒலிம்பியாட் ஒத்திகை போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
- 12:58 (IST) 24 Jul 2022வருமான வரி: ரஜினிக்கு விருது
தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது.
ரஜினி சார்பில் அவரது மகள் சௌந்தர்யாவிடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விருதை வழங்கினார்.
- 12:08 (IST) 24 Jul 2022டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு!
டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு.
இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்வு.
- 11:42 (IST) 24 Jul 2022சென்னையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு
” சென்னையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதத்திற்குள் மீதம் இருக்கும் பணிகளை முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் . பருவ மழைக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்திட உத்தரவு” சென்னையில், மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
- 11:35 (IST) 24 Jul 2022கள்ளக்குறிச்சி விவகாரம்: டிஐஜி உத்தரவு
ள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம். சேலம் சரக டிஐஜி தலைமையிலான இக்குழு 3 பிரிவுகளாக செயல்படுவார்கள். 12 துணை ஆய்வாளர்கள் உட்பட 55 போலீசாரை கூடுதலாக நியமித்து டிஜிபி உத்தரவு.
- 10:32 (IST) 24 Jul 2022நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உலக தடகளப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இந்திய விளையாட்டிற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த தருணம்; நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகள் - பிரதமர் மோடி
- 09:52 (IST) 24 Jul 2022பன்றிக் காய்ச்சல் : பன்றிகளை கொல்ல முடிவு
கேரளாவில் 2 பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி. பாதிப்பு பதிவான 2 பண்ணைகளில் உள்ள 360 பன்றிகளை கொல்ல அரசு முடிவு.
- 09:46 (IST) 24 Jul 2022கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஓபிஎஸ்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்.
- 08:35 (IST) 24 Jul 2022பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
உலக தடகள போட்டி : ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல். இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா. 88.13 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.
- 07:29 (IST) 24 Jul 2022ஆசிரியர் தகுதித் தேர்வில் திருத்தம் செய்ய அனுமதி
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூலை 27ஆம் தேதிவரை நான்கு நாள்களுக்கு திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
இந்தத் திருத்தங்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கு சென்று மேற்கொள்ளலாம்.
- 07:28 (IST) 24 Jul 2022செஸ் ஒலிம்பியாட்- 5 லட்சம் பரிசு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆட்டத்துக்கு முந்தைய இன்றைய பயிற்சி ஆட்டத்தில் 1,414 பேர் பங்கெடுக்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவர் லாரண்ட் பிரைட் உள்பட 90 நடுவர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள், செஸ் போட்டியை நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.