குரூப் 4 முறைக்கேடு : சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற சதி!

முறைக்கேட்டில் ஈட்பட்ட 99 பேருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து அதிரடியில் இறங்கியது டி.என்.பி.எஸ்.சி

Tnpsc Certificate Verification

TNPSC Group 4 malpractice : தமிழகத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரே மாதிரியாக 99 தேர்வர்களின் விடைகள் இருந்ததால் பலத்த சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது  தேர்வாணையம். முறைக்கேட்டில் ஈடுபட்ட 99 பேரையும் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு அந்த வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை

உடனே அழியும் சிறப்பு மையினால் தேர்வு எழுதி எழுதப்பட்டு பிறகு இடைத்தரகர்கள் உதவியுடன் 52 தேர்வர்கள் விடைத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு அதிகாரியாக இருந்த 2 வட்டாசியர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வேகமெடுக்கும் விசாரணை, டிபிஐ ஆவண கிளார்க் கைது

அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ரெக்கார்ட் கிளார்க்

இந்த முறைக்கேடின் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ரெக்கார்ட் கிளார்க் ஓம் காந்தன் நேற்று (26/01/2020) சென்னையில் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது காவல்துறை.  மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சென்னை டி.பி.ஐ.யில் இடைத்தரகராக இருக்கும் பழனி என்பவர் மூலமாக முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் அறிமுகமாகியுள்ளார். தனக்கு தெரிந்த நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வைத்தால் ரூ. 15 லட்சம் ஓம் காந்தனுக்கு தருவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த முறைகேட்டில் ஈடுபட ரூ. 2 லட்சம் முன்பணமாக ஓம் காந்தனுக்கு கொடுத்த ஜெயகுமார், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பே ராமேஸ்வரம் சென்று தேர்வர்களுக்கு மேஜிக் பேனாக்களை கொடுத்துள்ளார். தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த விடைத்தாள்களை சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் தட்டச்சர் மாணிக்க வேலு. அவருக்கு உதவியாக ஓம் காந்தன் நியமனம் செய்யப்பட்டிருந்தார். விடைத்தாள்களை எடுத்துக் கொண்டு புறப்பட்ட மாணிக்கவேல் சென்ற வாகனத்தை இடைமறித்து இரவு உணவு சாப்பிட அழைத்துச் சென்றுள்ளார் ஓம் காந்தன். பிறகு
விடைத்தாள்கள் வைத்திருந்த வாகனத்தின் சாவியை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளாா்.

வாகனத்தில் இருந்து விடைத்தாள்களை எடுத்துச் சென்ற ஜெயக்குமார் விடைத்தாள்களில் மாற்றங்களை செய்ய துவங்கியிருக்கிறார். பிறகு சென்னை நோக்கி செல்லும் வண்டியை அதிகாலை  தேநீர் குடிப்பதற்காக 5.30 மணியளவில் விக்கிரவாண்டியில் நிறுத்த வேண்டும் என்று ஓம் காந்தனிடம் கூறிவிட்டு விடிவதற்குள் 99 நபர்களின் தேர்வு தாள்களில் மாற்றங்களை செய்துள்ளார் ஜெயக்குமார். அதிகாலை 05.30 மணி அளவில் விக்கிரவாண்டியில் தேநீர் குடிக்க வண்டி நிறுத்தப்பட்ட போது, மீண்டும் விடைத்தாள்கள் எப்படி எடுக்கப்பட்டதோ அதே போன்று வாகனத்திற்குள் வைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு உதவியாக இருந்த பாலசுந்தர்ராஜ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். ஓம் காந்தன் மற்றும் பாலசுந்தர்ராஜ் இருவரும் விசாரணைக்கு பிறகு எழும்பூரில்  ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா்.  விசாரணை நடத்திய நீதிபதி பிப்ரவரி 7-ஆம் தேதி வரை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருவரையும் அடைக்க உத்தரவிட்டாா். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜெயக்குமார் தேடப்பட்டு வருகிறார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 4 malpractice read accused om kanthan full statement here

Next Story
இறுதிப் பயணத்துக்கு தயாராக இருங்கள்… துரோகிகள்… பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம்!acor prakash raj, death threaten letter, death threat to actor prakash raj, பிரகாஷ்ராஜ், பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல், death threat letter to hd kumaraswamy, Nijagunananda Swamy death threat letter, 15 பேருக்கு கொலை மிரட்டல், kannada death threat letter to prakash raj, who is Nijagunananda Swamy, india news, Tamil indian express, deth threaten letter to 15 celebrities
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X