Advertisment

TNPSC Group 4 Result 2018: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் tnpsc.gov.in -ல், 14 லட்சம் பேர் தகுதி

TNPSC Group 4 Result 2018, TNPSC CCSE 4 Cut Off Marks 2018-2019, tnpsc.gov.in  இணையதளத்தில் பார்க்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
alagappa university ug results, alagappauniversity.ac.in, அழகப்பா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகள்

alagappa university ug results, alagappauniversity.ac.in, அழகப்பா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகள்

TNPSC Group 4 Result 2018 cut off Marks Released @ Tnpsc.gov.in :

Advertisment

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு எழுதிய 20.7 லட்சம் பேர்களில் 14 லட்சம் பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றனர். கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 30 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். tnpsc.gov.in இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம்! .

TNPSC CCSE 4 Cut Off Marks 2018-2019: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இந்த முறை TNPSC CCSE 4 என்ற பெயரில் நடத்தப்பட்டது. காரணம், வழக்கமான குரூப் 4 தேர்வுடன் வி.ஏ.ஓ பதவிக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்பட்டதுதான்!

TNPSC Group 2: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு, செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம், tnpsc.gov.in -ல் முழு விவரம்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வி.ஏ.ஓ, டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், ஸ்டெனோ-டைப்பிஸ்ட் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் சுமார் 9,500 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை 20.7 லட்சம் பேர் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் பேட்டி ஆகியோர் இன்று (ஜூலை 31) கூறுகையில், ‘குரூப் 4 தேர்வை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். ஆகஸ்ட் 30 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.’ என்றார்கள்.

‘குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை. புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தேர்வில் 14 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.’ என்றும் அவர்கள் கூறினர்.

TNPSC Group 4 Result 2018: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் tnpsc.gov.in -ல் வெளியீடு To Read In English, Click Here

TNPSC Group 4 Result 2018: ஆகஸ்ட் 30 வரை சான்றிதழ் பதிவேற்றங்களை செய்யலாம் To Read, Click Here

tnpsc.gov.in இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம். கட்-ஆஃப் மதிப்பெண்கள் பொதுப் பிரிவினர், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், பட்டியல் வகுப்பினர் என ஒவ்வொரு தரப்புக்கும் மாறுபடும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து அறிவிக்கும்.

TNPSC Group 4 Result 2018, TNPSC CCSE 4 Cut Off Marks 2018-2019, tnpsc.gov.in, Tamilnadu Public service Commission, VAO Examination, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் 2018 TNPSC Group 4 Result 2018: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் tnpsc.gov.in -ல் காணலாம்.

TNPSC Group 4 Result 2018: cut off Marks Released @ Tnpsc.gov.in டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு பார்ப்பது எப்படி?

1. டி.என்.பி.எஸ்.சி. அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in -ஐ திறக்கவும்.

2. அதில் 2018-ம் ஆண்டுக்கான லேட்டஸ்ட் அறிவிப்பை க்ளிக் செய்யவும்.

3. மேலும் TNPSC Combined Civil Service Examination Group IV Result 2018 என்கிற ‘லிங்க்’-ஐ ‘க்ளிக்’ செய்யவும்.

4. அங்கு உங்களது பதிவு எண்ணையும் பாஸ்வேர்டையும் பதிவு செய்யவும்.

5. உங்கள் தொடர்பாக அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சமர்ப்பிக்கவும்.

6. அதில் இருந்து உங்களது மதிப்பெண்களை பார்க்கவும், டவுன் லோடு செய்யவும் முடியும். அதை உங்களது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

TNPSC CCSE 4 Answer Key எனப்படும் இந்தத் தேர்வுக்காக விடைகளை ஏற்கனவே tnpsc.gov.in இணையதளத்தில் பார்த்திருப்பீர்கள். அதை வைத்து நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களை ஒப்பீடு செய்யலாம்.

 

TNPSC Group 4 Result 2018, TNPSC CCSE 4 Cut Off Marks 2018-2019, tnpsc.gov.in  இணையதளத்தில் பார்க்கலாம்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment