வருவாய்த்துறை அலுவலர்கள் பிப்ரவரி 27ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைச் சேர்ந்த ஊழியர்கள் பிப்ரவரி 27ம் தேதி காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முதலில் பிப்ரவரி 13ம் தேதி எல்லா மாவட்டத்தில் உள்ள அலுவலர்களும் விடுப்பு எடுத்துகொண்டு போராட்டம் நடத்துவர். தொடர்ந்து உண்ணாவிரத போரட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தலைவர் முருகையன் கூறுகையில் “ அனைவருக்கும் சரியான விகிதத்தில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
மேலும் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு சரியான விகிதத்தில் சம்பவம் வழங்கப்படவில்லை. சங்கத்தின் முக்கிய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. பிப்ரவர் 22 முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். பிப்ரவர் 27ம் தேதி காலவறையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“