தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் கோத்தகிரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/90f29ce7-a27.jpg)
வரும் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக கோவையில் இருந்து மதுரை வழித்தடத்தில் 270 பேருந்துகளும், திருச்சி வழித்தடத்தில் 180 பேருந்துகளும், தேனி வழித்தடத்தில் 160 பேருந்துகளும், சேலம் வழித்தடத்தில் 240 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/0a6eb087-772.jpg)
மேலும் ஈரோட்டில் இருந்து மதுரை வழித்தடத்தில் 90 பேருந்துகளும், திருச்சி வழித்தடத்தில் 60 பேருந்துகளும், அதே போல திருப்பூரில் இருந்து மதுரை வழித்தடத்தில் 110 பேருந்துகளும், திருச்சி வழித்தடத்தில் 170 பேருந்துகளும் தேனி வழித்தடத்தில் 40 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோவை மண்டலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள சூலூர் பேருந்து நிலையத்திற்கு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்குரிய அறிவிப்பை கோவை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/d117d33a-048.jpg)
/indian-express-tamil/media/post_attachments/20c7a2d0-692.jpg)
இதற்கிடையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, கோவை ரயில் நிலைய சந்திப்பில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் மோப்ப நாயுடன் கோவை ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/683583ba-05b.jpg)
தீபாவளி பண்டிகையை ஒட்டி, கோவையில் பணி புரியும் வடமாநிலத்தவர்கள், அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக, கோவை ரயில் நிலைய சந்திப்பில், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் கோவை ரயில் நிலைய சந்திப்பில் இருக்கக் கூடிய ஒவ்வொரு பிளாட்பார்மிலும் சோதனையை மேற்கொண்டனர். ரயில் மூலமாக கொண்டு செல்லப்படும் சரக்குகளும் முழுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டது. இது வழக்கமான சோதனை தான் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“