TNSTC Tamil News: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாநிலம் முழுதும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அவ்வகையில், சென்னை – திருச்சி, மதுரை போன்ற முக்கிய வழித்தடங்களில் இடையே ‘அல்ட்ரா டீலக்ஸ்’ மற்றும் குளிரூட்டப்பட்ட ஏ.சி பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த ஏ.சி பேருந்துகள் ‘அல்ட்ரா டீலக்ஸ்’ பேருந்துகளை விட ரூ.20 முதல் ரூ.40 வரை கட்டணம் குறைவு ஆகும்.
ஆனால் தற்போது இந்த ஏ.சி பேருந்துகளில் ஏ.சி உள்ளிட்ட கண்ணாடிகளை அகற்றி வருகின்றனர். இதற்கு காரணமாக ஏ.சி-களின் பராமரிப்பு செலவு அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, தொலைதூரப் பேருந்துகளை இயக்கும் மற்றொரு அரசுக்குச் சொந்தமான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC), 7 ஆண்டுகள் பழமையான ஏ.சி பேருந்துகளை ஏ.சி அல்லாத பேருந்துகளாக மாற்றியது. இப்போது, அந்தப் பாணியை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் அதைப் பின்பற்றுகிறது.

தற்போது ஏறக்குறைய அனைத்து ஏ.சி பேருந்துகளும் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசு புதிய ஏசி பேருந்துகள் எதையும் வாங்காத நிலையில், தற்போதுள்ளவை கூட ஏசி அல்லாத பேருந்துகளாக மாற்றப்படுவது துரதிர்ஷ்டவசமானது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பயனற்ற குளிரூட்டல் மற்றும் சில சமயங்களில், முழு ஏர் கண்டிஷனிங் யூனிட் செயலிழந்துவிட்டதாக பயணிகள் புகார் செய்யத் தொடங்கியதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) அதிகாரிகள் இதைச் செய்ததாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் காற்றோட்டம் இல்லாததால் பேருந்துகளில் சிறிது நேரத்திலே வெப்பம் அதிகரித்து விடுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து உற்பத்தியாளருடன் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் (AMC) இல்லாததால், டிப்போக்களில் உள்ள பொறியாளர்கள் மற்றும் மெக்கானிக்கள் இந்த சிக்கல்களைச் சரிசெய்ய இருப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிதி நெருக்கடியால், பேருந்துகள் சும்மா கிடக்கின்றன. இதை தவிர்க்க, இந்த பஸ்களை பயன்படுத்த ஏ.சி இல்லாத பேரூந்துகளாக மாற்றியுள்ளோம். கும்பகோணம் டிப்போக்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு உதிரி பேருந்துகளாக சும்மா கிடக்கிறது என்று டிஎன்எஸ்டிசி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil