வாரியத்தால் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பில் 1000க்கும் மேற்பட்டவர்கள் தகுதியற்ற சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணியில் சேர்ந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
8,000க்கும் அதிமான இரண்டாம் நிலை காவலர்/இரண்டாம் நிலை சிறை காவலர்/ தீயணைப்பாளர் போன்ற பணிகளுக்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் 10% விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
எழுத்து தேர்வு, உடல்தகுதித் தேர்வு, உடன்திரன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் போன்றைவைகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்வில் தமிழகத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் கலந்து கொண்டனர். எழுத்து தேர்வில் தகுதியான 47,000 தேர்வர்களுக்கு தமிழகத்தில் உள்ள 15 மையங்களில் உடல்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
உடல்தகுதித் தேர்வில் தேர்வான தேர்வர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு வரவழைக்கப்பட்டு, பணி நியமனமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட சுமார் 1000 தேர்வர்கள் தகுதியற்ற சான்றிதழ்களை சமர்பித்துள்ளனர்.
விளையாட்டு சான்றிதழ்களை வழங்கிய சங்கங்கள் எவையும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (எஸ்.டி.ஏ.டி) அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அத்தகைய சான்றிதழ்கள் மூலம் பணி அமர்வது தவறான முன்னுதாரணம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1000 தேர்வர்கள் மீதும், தகுதியற்ற சான்றிதழ்கள் அளித்த விளையாட்டு சங்கங்கள் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேலூர் பயிற்சி மையம் முறைகேடு:
வேலூரில் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற தேர்வர்கள் காவலர் பணியில் அதிகாமான தேர்வாகியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.