ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை அமைச்சரவையில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை அமைச்சரவையில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
அமைச்சரவை

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது கவனத்தி ஈர்த்துள்ளது. 

Advertisment

சட்டசபையில் இன்று சுற்றுலா கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் இன்று பிற்பகலில் நிறைவடைகிறது.

அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது நொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

Cabinet Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: