/indian-express-tamil/media/media_files/2025/01/24/ITRHGXl9HQNoZs8pLMdn.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.39-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோகிராம் சி.என்.ஜி எரிபொருளின் விலை ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் நிறைவு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் பிரச்சாரம், இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.
-
Feb 04, 2025 00:04 IST
கல்விக்கடன் ரத்து செய்து என்ன பயன்? அண்ணாமலை கேள்வி
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக்கடனில் மொத்த நிலுவைத்தொகை ரூ.16,302 கோடியாக உள்ளது. வெறும் ரூ.48.95 கோடி கல்விக்கடன் மட்டும் தள்ளுபடி செய்து யாருக்கு என்ன பயன்? நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான் . தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக மாணவர்களின் ஒட்டு மொத்த கல்விக்கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 20:47 IST
மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படை: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 03, 2025 19:45 IST
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி: தமிழக அரசு
கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வசூலிக்க சரியான பதிவேடுகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Feb 03, 2025 18:57 IST
டெல்லியில் தேர்தல் பரப்புரை நிறைவு
டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை மறுநாள் (பிப். 5) ஒரே கட்டமாக நடைபெறுவதால், மொத்தம் 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது.
-
Feb 03, 2025 18:51 IST
அண்ணாவின் பெரும்புகழ் போற்றுவோம்! - சீமான்
"பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை. பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி.
'மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர். நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, 'தம்பி வா தலைமையேற்க வா' என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்.
தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன். அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர். யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்" என்று சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 03, 2025 18:29 IST
துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு ‘காந்தா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் துல்கர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது
-
Feb 03, 2025 18:28 IST
குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
ராணிப்பேட்டை, சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற விவகாரத்தில் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி ஹரி என்பவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
-
Feb 03, 2025 18:17 IST
இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவும், வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
-
Feb 03, 2025 17:54 IST
தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
எல்.ஜி.பி.டி.க்யூ+ சமூகத்தினர் மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
எல்.ஜி.பி.டி.க்யூ+ சமூகத்தினருக்கான கொள்கை இறுதி வடிவம் பெறும் நிலையில் உள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கு தனிக்கொள்கையை வகுப்பது என அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
Feb 03, 2025 17:44 IST
தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு
"தமிழகத்திற்கு இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்வே திட்டம் வேண்டாம் என மத்திய அரசு முடிவெடுக்கவில்லை. பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலம் தனித்துவமானது; மேம்பாலம் திறப்பு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
Feb 03, 2025 17:37 IST
தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள்?
தமிழ்நாட்டில் உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,5 விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 17:37 IST
தி.மு.க மாணவரணி ஆர்ப்பாட்டம்
"பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர்மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில் வரும் 6ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தி.மு.க மாணவரணி செயலாளர் அறிவித்துள்ளார்.
-
Feb 03, 2025 17:14 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நாளை தீர்ப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
Feb 03, 2025 16:51 IST
டெல்லியில் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை
பாஜகவை பொறுத்தவரை சொன்னதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர். எனவே டெல்லியில் பாஜக வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 7 எம்.பி.க்களை கொடுத்த டெல்லி மக்கள் தற்போது ஆம் ஆத்மி கட்சியை தூக்கி எறிய முடிவு செய்துள்ளனர்.
-
Feb 03, 2025 16:35 IST
ஆளுநர் தொடர்பான கருத்துகளை மக்களவையில் முன்வைக்க அனுமதி மறுப்பு
ஆளுநர் தொடர்பான கருத்துகளை மக்களவையில் முன்வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் ஐடி, சிபிஐ மற்றும் ஈடி ஆகியவற்றை பயன்படுத்தி வந்த பாஜக, தற்போது புதிதாக ஆளுநர் என்னும் புதிய ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர். தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி கூறினார்
-
Feb 03, 2025 16:30 IST
தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு - 2 பேர் கைது
சென்னை, மன்னார்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேரை கைது செய்தனர்.
-
Feb 03, 2025 16:11 IST
"சிலை வைப்பது மரியாதை செலுத்துவதாக அமையாது" - கனிமொழி
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.3,000 கோடியில் சிலை வைப்பது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது. பட்டேலின் வார்த்தையை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என எம்பி., கனிமொழி கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 16:06 IST
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை - திமுக எம்.பி. கனிமொழி
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை, மிரட்டப்படுகின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடந்தன. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் ஆண்டி இந்தியன் என்கிறார்கள்.
-
Feb 03, 2025 16:02 IST
மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? - திமுக எம்.பி. கனிமொழி
5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு இருந்தது. இரும்புப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவு குறித்து மத்திய அரசு இதுவரிஅ மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க எம்.பி.கனிமொழி பேசியது.
-
Feb 03, 2025 15:37 IST
வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை - டிஜிபி அலுவலகம்
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் ஆனதற்கான சான்றுகள் காணப்படுகின்றன். தீ விபத்து என்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட சதி என்ற ஏடிஜிபி கல்பனா நாய்க்கின் குற்றச்சாட்டு குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
-
Feb 03, 2025 15:32 IST
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு
இந்தியாவிற்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 15:21 IST
அண்ணாமலை பாராட்டு
டாடா ஸ்டீல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தா உடனான இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
-
Feb 03, 2025 15:19 IST
பிப்.10இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
பிப்ரவரி 10 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக அமைச்சரவை ஆலோசிக்க உள்ளது.
-
Feb 03, 2025 15:17 IST
குடியரசுத் தலைவர் உரை இப்படி இருக்கக்கூடாது - ராகுல் காந்தி
குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. குடியரசுத் தலைவர் உரை இப்படி இருக்ககூடாது. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ராகுல் காந்தி இவ்வாறு உரையாற்றினார்.
-
Feb 03, 2025 15:04 IST
ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் வழக்கு; கூகுள் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
-
Feb 03, 2025 14:55 IST
‘மேக் இன் இந்தியா’ ஒரு நல்ல யோசனை; ஆனால், பிரதமர் மோடி தோற்றுவிட்டார் - ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவையில் குடியரசுத் தலைவர் முறைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “"இந்த அறையில் யாரும் உடன்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதமருக்கு ஒரு சிறிய புள்ளிவிவரத்தை தருகிறேன். பிரதமர், நான் வழிகாட்டுதலின் பேரில் உடன்படும் ஒன்று, மேக் இன் இந்தியா திட்டம் - ஒரு நல்ல யோசனை. சிலைகள், செயல்பாடுகள், முதலீடு என்று அழைக்கப்படுவதை நாங்கள் பார்த்தோம், அதன் விளைவு உங்கள் முன் உள்ளது. உற்பத்தி 2014-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6 சதவீதமாகக் குறைந்தது. இது 60 ஆண்டுகளில் உற்பத்தியின் மிகக் குறைந்த பங்காகும்.
"நுகர்வையும் உற்பத்தியையும் நீங்கள் ஒழுங்கமைக்க முடியும். 1990 முதல் ஒவ்வொரு அரசாங்கமும் நுகர்வுக்கு ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளது. ஒரு நாடாக நாம் உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் தோல்வியடைந்துள்ளோம்.
"சீனப் படைகள் நம் நாட்டிற்குள் இருப்பதை பிரதமர் மறுத்தார், ஆனால் நமது ஆயுதப் படைகள் இன்னும் சீனப் படைகளுடன் நம் நாட்டிற்குள் நுழைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது ஒரு கேலிக்கூத்து அல்ல, ஆனால், உண்மை.” என்று கூறினார்.
-
Feb 03, 2025 14:47 IST
குடியரசுத் தலைவர் உரை இப்படி இருக்கக் கூடாது - மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவையில் குடியரசுத் தலைவர் முறைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை; குடியரசுத் தலைவர் முறை இப்படி இருக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது” என்று பேசினார்.
-
Feb 03, 2025 14:42 IST
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப். 10-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசிக்க உள்ளது.
-
Feb 03, 2025 14:07 IST
தமிழ்நாடு ஆளுநரை நீக்க கூறிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்றவையை நீக்கக்கூடிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு உத்தரையர் கூறிய மனோ தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் விடுப்பு செய்ததாக மனுவில் மட்டும் சாட்டப்பட்டிருந்தது.
-
Feb 03, 2025 13:49 IST
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8-ல் கண்டனப் பொதுக்கூட்டம் - தி.மு.க அறிவிப்பு
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி தமிழ்நாடு பெயரை கூட உச்சரிக்காததை கண்டித்து தி.மு.க சார்பில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 8-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது.
-
Feb 03, 2025 13:39 IST
டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நூதன பிரசாரம் செய்தார். டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அரசியலை காட்டிலும் கல்வியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆம் ஆத்மி ஆட்சியில், டெல்லியின் கல்வி நிலை குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
-
Feb 03, 2025 13:09 IST
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
கும்பமேளா நெரிசலில் 30 பேர் இறந்தது குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு என மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு. கடந்த வாரம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மக்களவையிலும் கும்பமேளா உயிரிழப்புகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.
-
Feb 03, 2025 13:00 IST
காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை: இபிஎஸ்
காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது. காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசுவதுதான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யமல் என்னதான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார்.
-
Feb 03, 2025 12:38 IST
புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை சென்னை ஐஐடி இயக்குநர் அறிமுகம் செய்துவைத்தார்
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிமுகம் செய்துவைத்தார். ”இதுவரை வெளிநாடுகளில் உள்ள தரவுகளை வைத்துதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரியாக உள்ளது. தற்போது 500 நோயாளிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள மரபணு தரவுகளை ஒப்பிட்டு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் தேசத்திற்கான பிரத்யேக மருந்தைக் கொடுக்கலாம்" என்று அவரு கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 12:17 IST
பொது விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அண்ணா நினைவு நாளை ஒட்டி, பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
-
Feb 03, 2025 12:08 IST
வெடித்த க்ரேனின் பேட்டரி - உயிர் சேதம் தவிர்ப்பு
சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத கிரேனின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கிரேன் ஓட்டுநர், ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 11:54 IST
ரூ.20 லட்சம் பறித்த வழக்கு - எஸ்.ஐ.க்கு ஜாமின்
தனியார் ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி எஸ்.ஐ.க்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழிப்பறி செய்ததாக கூறப்படும் பணம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. பணத்தை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்சிங், வருமான வரித்துறை 3 பேர் ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.
-
Feb 03, 2025 11:37 IST
வடசென்னை மின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்குக - அன்புமணி ராமதாஸ்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்க வேண்டும். பிற மின் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அனல் மின் நிலைய பணியை முடிக்க நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தி அரசு நாடகம் போடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 11:13 IST
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும் - உதயநிதி ஸ்டாலின்
"தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாக கட்டியுழுப்பிய பெருந்தகை. திமுக என்னும் அசைக்க முடியாத ஆணி வேர் பேரறிஞர் அண்ணா" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 03, 2025 11:08 IST
அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் சொத்துகுவிப்பு வழக்கு 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. வழக்கின் விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 10:36 IST
முறையான விசாரணை தேவை - இ.பி.எஸ்
ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, "தன்னை கொல்ல சதி என்ற ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக்கின் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 03, 2025 10:00 IST
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் உயர்வு - மத்திய அரசு பாராட்டு
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது. விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறையால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு எனவும், மாணவர்களின் கணிதம், மொழித்திறன் ஆகியவை குறிப்பிட்ட அளவு முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 08:50 IST
ஆர்.என். ரவி வழக்கு - இன்று விசாரணை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய சுகின் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆர்.என். ரவி செயல்படுவதாகக் கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
-
Feb 03, 2025 07:32 IST
அண்ணா நினைவு தினம் - ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி
இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, அண்ணா சிலை - மெரினா கடற்கரை வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 07:12 IST
இன்றுடன் நிறைவுபெறும் தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. அதன்பேரில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 03, 2025 07:10 IST
சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 90-ஆக உயர்த்தப்படவுள்ளது. தற்போது 72 சங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை உயர்கிறது.
-
Feb 03, 2025 07:07 IST
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.