/indian-express-tamil/media/media_files/2025/02/06/vtYskwK9DGQDxeFbpqlz.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.90-க்கும், டீசல் விலை, ரூ92.48-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 05, 2025 21:43 IST
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்ரூ.4 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர், சின்னவாடி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
Feb 05, 2025 21:39 IST
விருதுநகர் தாதபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து; போர்மேன் கைது
விருதுநகர் தாதபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக, அந்த ஆலையின் போர்மேன் ஆக பணியாற்றிய மேட்டமலையைச் சேர்ந்த செல்வகுமார் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
Feb 05, 2025 20:25 IST
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை: தவறான தகவல்களைப் பரப்பாதீர் - கலெக்டர் விளக்கம்
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். தகவல் கிடைத்த உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால் நேரடியாக சென்று விசாரித்ததில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படியே காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமிக்கு கரு கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
-
Feb 05, 2025 19:26 IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: 27 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு
டெல்லி சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு முன்னிலை அளிக்கின்றன, பா.ஜ.க 39 முதல் 60 இடங்களைப் பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.சி-யின் எக்சிட் போல் கருத்துக் கணிப்பில் பா.ஜ. வெற்றி பெறும் என கணித்துள்ளது.
அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு: 22-31
பா.ஜ.க: 39-45
காங்கிரஸ்: 0-2 இடங்கள் பெறும் என்று கணித்துள்ளது.
சாணக்யா ஸ்ட்ரேட்டஜிஸ் கணிப்பு
பா.ஜ.க: 39-44
ஆம் ஆத்மி: 25-28
காங்கிரஸ் 02-03 இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்டுள்ளது.
-
Feb 05, 2025 18:41 IST
டெல்லி சட்டமன்ற தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 8 டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
-
Feb 05, 2025 18:39 IST
கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு சிகிச்சை
மதுரை சோழவந்தானில் தென்கரை பாலம் அருகே உணவகத்தில் கிரில், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Feb 05, 2025 18:04 IST
திருப்பரங்குன்றம் விவகாரம் - ஆட்சியர் விளக்கம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதநல்லிணக்கம் பேண அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் வெளியூரைச் சேர்ந்த அமைப்பினர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அனைத்து மதத்தினருக்கு ஒற்றுமையாக மதச்சார்பின்றி வாழ்வதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
Feb 05, 2025 17:11 IST
பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் மரணம்
விருதுநகர் சின்னவாடியூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் மரணமடைந்தார். காயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5க்கும் மேற்பட்ட அறைகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டம் ஆனது. சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு செய்துவரும் நிலையில் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட வருவாய் அலுவலர் ரத்து செய்துள்ளார்.
-
Feb 05, 2025 17:08 IST
தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி
டெல்லியில் தி.மு.க மாணவரணி சார்பில் நாளை நடக்கும் யுஜிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இண்டியா கூட்டணியில் இருந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்,முக எம்.பிக்கள் பங்கேற்கின்றனர்.
-
Feb 05, 2025 16:56 IST
நாய்க்கடியால் ஒவ்வொரு மணி நேரமும் 60 பேர் பாதிப்பு
நாய்க்கடியால் ஒவ்வொரு மணி நேரமும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2024ல் மட்டும் 22 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாய்க்கடி சம்பவத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோரில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Feb 05, 2025 16:34 IST
பாலியல் வன்கொடுமை - உறவினர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 05, 2025 16:33 IST
மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டம் சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. மேலும் வழக்கின் விசாரணை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
-
Feb 05, 2025 16:10 IST
கைகளில் விலங்கு கட்டி அவமானம்: அமெரிக்காவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ்
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவண் கேரா கொந்தளித்துள்ளார்.
-
Feb 05, 2025 16:03 IST
டெல்லியில் 46.55% வாக்குகள் பதிவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 46.55% வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
Feb 05, 2025 15:47 IST
டி.டி.வி தினகரன் கோரிக்கை
"தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறைக்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Feb 05, 2025 15:17 IST
8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு
சிவகங்கை, மானாமதுரை அருகே 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 72 வயது முதியவர் உட்பட 7 பேரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்
-
Feb 05, 2025 15:05 IST
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 அறைகள் தரைமட்டமான நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Feb 05, 2025 15:03 IST
மதுபான பாட்டில்கள் கடத்தல் -இருவர் கைது
இரு சக்கர வாகனத்தில் இருக்கைக்கு கீழே பிரத்யேக அறை அமைத்து, புதுச்சேரியில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைதான சரவணன், சந்துரு மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 05, 2025 14:32 IST
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் அருகே சின்னவாடியில் உள்ள சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சிலர் பட்டாசு ஆலையின் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல்.
-
Feb 05, 2025 14:11 IST
மாணவி பாலியல் வன்கொடுமை - ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Feb 05, 2025 14:07 IST
18 வயது பெண்ணுக்கு கிளாம்பாக்கத்தில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பெண் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை மாதவரத்தில் தங்கியிருந்த இவரின் தோழிக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க, அதனைக் காண்பதற்காக சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளார். மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநகர பேருந்துக்காக காத்திருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்ற நிலையில், இதனைக் கவனித்த 55 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பெண்ணிடம் சென்று விசாரித்துள்ளார்.
அப்பெண் மாதவரம் செல்வதை அறிந்துகொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர், இரவு நேரம் இனி பஸ் வாராது என்றும், இங்கே நிற்பது ஆபத்தானது என்றும், தான் மாதவரம் தான் செல்வதாக கூறி ஆட்டோவில் அந்தப் பெண்ணை ஏற்றிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் பெண் வர மறுத்தும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
-
Feb 05, 2025 13:45 IST
கரூர்: பணத்தை பங்கு போட்ட போலீஸ்
கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்களின் பணத்தை பறித்து பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் காவல்துறை. ரூ.1,25,000 பணத்தை பங்கிட்டுக் கொண்டதாக, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 8 போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 05, 2025 13:32 IST
காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும் - செல்வப்பெருந்தகை
திருப்பரங்குன்றம் கோயிலிலும் சிக்கந்தர் தர்காவிலும் நாளை (பிப்.06) வழிபட இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
Feb 05, 2025 13:29 IST
பழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. இன்று முதல் பத்து நாட்களுக்கு தைப்பூசத் திருவிழா நடைபெறும். பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச தினத்தன்று திருத்தேர் திருவீதி உலா நடைபெறுகிறது.
-
Feb 05, 2025 13:15 IST
ராணிப்பேட்டை: கைது செய்யப்பட்டவருக்கு கை, கால் முறிவு
ராணிப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளியான தமிழரசனுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் துரத்தியபோது தவறி விழுந்த தமிழரசனுக்கு வலது கை, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல். வழக்கில் தமிழரசனின் மகன் ஹரி, விஷால், பரத் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Feb 05, 2025 13:10 IST
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி
நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதைதான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 05, 2025 13:05 IST
கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.
-
Feb 05, 2025 12:50 IST
பா.ஜ.க-வின் அரசியல் பலிக்காது- செல்வப்பெருந்தகை
மற்ற மாநிலத்தில் மத ரீதியான அரசியலை முன்னெடுப்பது போல், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பா.ஜ.க கையாள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குறிப்பாக, பா.ஜ.க-வின் அரசியல் திருப்பரங்குன்றம் முருகனிடம் பலிக்காது என அவர் விமர்சித்துள்ளார்.
-
Feb 05, 2025 12:08 IST
மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
Feb 05, 2025 12:06 IST
யு.ஜி.சி திருத்தங்களுக்கு எதிராக பெங்களூருவில் மாநாடு
பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மாநில உரிமையை பறிக்கும் யு.ஜி.சி திருத்தங்களுக்கு எதிரான மாநாடு பெங்களூருவில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல், கேரளா, ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா மாநில உயர் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
-
Feb 05, 2025 11:43 IST
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நரேந்திர மோடி
மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்
-
Feb 05, 2025 11:30 IST
திருப்பரங்குன்றம் விவகாரம் - 195 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வன்முறையை தூண்டும் விதமாக போராட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 05, 2025 11:26 IST
வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வனத்துறையின் கீழ் செயல்படும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியம், ரூ. 12,500-ல் இருந்து ரூ. 15,625-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 05, 2025 11:16 IST
மகா கும்பமேளாவில் புனித நீராட மோடி வருகை
மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அவருடன் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் படகில் சென்றார்.
-
Feb 05, 2025 10:57 IST
இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ? அண்ணாமலை கேள்வி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல், பெண்ணின் குரல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால் அந்த பெண் தப்பித்தார். நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன், இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 05, 2025 10:53 IST
பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்: சேகர்பாபு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநிலத்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். அது தமிழகத்தில் நடக்காது தமிழகம் திராவிட மண். இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
Feb 05, 2025 10:51 IST
சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு கூடுதல் நேரடி விமான சேவை
சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு கூடுதல் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் 2 நாட்கள், இந்த நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது!
-
Feb 05, 2025 10:50 IST
தமிழகத்தில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவு
தமிழ்நாட்டில், 2024ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 27,378 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, 13 நபர்கள் உயிரிழப்பு; 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவு; 343 பேருக்கு மலேரியா பதிப்பும், 2,817 பேருக்கு டைஃபாய்டு காய்சல் பாதிப்பும் பதிவாகி உள்ளது என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Feb 05, 2025 10:49 IST
கட்டுப்பாட்டை இழந்த கார் ஏடிஎம் மையத்தில் மோதி விபத்து
சென்னை அண்ணாநகர் 2வது நிழற்சாலையில், இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏடிஎம் மையத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக காரில் இருந்த 5 பேருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விபத்துகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 05, 2025 10:47 IST
திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற பக்தர்களுக்கு மட்டும் அனுமதி
திருப்பரங்குன்றம் மலையில், உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபட, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, கட்சியாகவோ இயக்கமாகவோ மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
Feb 05, 2025 09:47 IST
த.வெ.க மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு
நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய த.வெ.க திட்டமிட்டுள்ளது. விரைவில் நிர்வாகிகளை நியமனம் செய்து பட்டியலை அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 05, 2025 09:46 IST
அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது சீனா. நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருட்கள் மீது 15% வரியும், கச்சா எண்ணெய், வேளாண்மை உபகரணங்கள் மீது 10% வரியும் விதித்து சீனா பதிலடி
-
Feb 05, 2025 09:45 IST
நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் வாக்களித்த ராகுல்காந்தி
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாக்களித்தாா,
-
Feb 05, 2025 09:44 IST
சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று போராடிய 3 பேரை சஸ்பெண்ட் செய்தததை கண்டித்து, சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், சங்கத்தில் இருந்து விலகுவதாக 400-க்கு மேற்பட்ட ஊழியர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Feb 05, 2025 09:09 IST
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 2-வது நாளாக தடை
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் 144 தடை உத்தரவுக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் இயல்பு நிலைக்கு திரும்பியது. மேலும், சுப்பிரமணிய சாமி கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
-
Feb 05, 2025 08:51 IST
டெல்லி சட்டமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு மோடி வாழ்த்து
டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.டெல்லி வாக்காளர்கள், இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 05, 2025 08:48 IST
என் அப்பாவின் ஒழுக்கம் எனக்குள் ஒட்டிக்கொண்டது: எம்.எஸ்.தோனி
"என் அப்பாவின் ஒழுக்கம் எனக்குள் ஒட்டிக்கொண்டது. நர்சரி முதல் 12ம் வகுப்பு வரை நான் பள்ளிக்கு ஒருபோதும் தாமதமாக சென்றதில்லை" "சரியான வழிகாட்டுதலும், அர்ப்பணிப்பும் இருந்தால் இலக்குகளை எட்டி சாதிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
-
Feb 05, 2025 08:47 IST
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்
பெங்களூர் கன்னிங்ஹாம் பகுதியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்றியாளர் ராகுல் டிராவிட்டின் காரில் சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், ஆட்டோ ஓட்டுனருடன் டிராவிட் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே சமயம் இது குறிதது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
-
Feb 05, 2025 08:44 IST
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும் அமெரிக்காவில் வசிக்கும் 55 லட்சம் இந்தியர்களில் 8-12 லட்சம் பேர் சட்டவிரோமாக குடியேறியவாகள் என்றும், ஏராளமான இந்தியர்கள் போலீஸ்க்கு பயந்து வேலையை விட்டு நின்றுவிட்டார்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்தினரை மோடி திருப்பி அனுப்பி வரும் அதே வேலையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
Feb 05, 2025 08:25 IST
விருதுநகர் அகழ்வாராய்ச்சியில் மெருகேற்றும் கல் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பங்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை மெருகேற்ற இந்த கல் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.