Today Chennai weather Tamil Nadu Heatwave alert monsoon 2019 updates : ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 எம்.எம். அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
Low Pressure is to form in North Bay of Bangal
அடுத்த 4 அல்லது 5 நாட்களில் வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை ஒரு சில இடங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்த வெயிலின் தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான்
அனல்காற்று
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதாலும், தென்மேற்கு பருவமழை இன்னும் தமிழக - கேரள எல்லைப்பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதாலும், கடல்காற்று வீசாமல் இருப்பதாலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசிவருகிறது. கடந்த வாரம் இரவு 10 மணி வரை சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானதிற்கும் இது தான் காரணம்.
வடக்கு தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், சென்னை, காஞ்சி, கூடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை, பெரம்பலூர், கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று மிகவும் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதீத வெப்பம் பதிவாக இருக்கும் மாவட்டங்கள்
நாளை வரை மதுரை, திண்டுக்கல், சேலம், நெல்லை, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைவிட வழக்கத்திற்கு மாறாக 2ல் இருந்து 4 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். எனவே பொதுமக்கள் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்புகள் இல்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
மேலும் படிக்க : நேற்றைய வானிலை அறிக்கையுடன் இன்றைய வானிலை அறிக்கையை ஒப்பிட
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.