Today Chennai Weather Tamil Nadu Rains Monsoon 2019 Forecast Latest Updates : தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. அதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிக அளவு மழை பதிவான இடங்கள்
வேடசந்தூர் (திண்டுக்கல்) அதிக அளவாக - 7 செ,மீ மழை பதிவாகியுள்ளது
தேவலா (நீலகிரி) 4 செ.மீ
பெரியார் (தேனி) 2 செ,மீ
நடுவட்டம் (நீலகிரி) 2 செ.மீ
வால்பாறை (கோவை) 2 செ.மீ
குளச்சல், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : Tamil Nadu Weather: அடுத்த 2 நாட்களுக்கு மழை நிச்சயம் – வானிலை மையம்!
சென்னை வானிலை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் மழை பெய்யும். வடசென்னையில் சில இடங்களில் இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 20ம் தேதி மற்றும் 22 தேதிகளில் மழை பொழிவு இருந்தது. ஆனால் அது போதுமான அளவாக இல்லை. மேலும் வரும் நாட்களுக்கும் சென்னையில் மழை இருக்கும். ஆனால் அது மக்களின் அடிப்படை தேவையினை பூர்த்தி செய்யக் கூட போதுமானதாக இருக்காது என்பதால் கூடுமான வரையில் மழை நீரை சேகரிக்க முயற்சி செய்யுங்கள். அதே போன்று அனைவரும் தண்ணீரை சிக்கனமாக செலவிடுங்கள் என்று தலைவர்கள், வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.