Today Chennai Weather Tamil Nadu Water Scarcity Southwest Monsoon 2019 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளாதாக இன்றைய வானிலை அறிக்கை அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே இரண்டொரு நாட்களில் வெப்பத்தின் கடுமை முழுமையாக குறையும் என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் மனம் கொஞ்சம் குளுகுளுவென இருக்கிறது. இருந்தும் அணைகளின் நீர் இருப்பு, நீர் பற்றாக்குறை, மழையில்லாமல் வறண்டு கிடக்கும் நீர் நிலைகள் மக்கள் மனதில் கவலை கொள்ள வைக்கிறது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அனல் காற்று எச்சரிக்கை
தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, விழுப்புரம், கடலூர், நாகை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய இடங்களில் நேற்றைப் போலவே இன்றும் அனல் காற்று வீசக்கூடும்.
பொதுமக்கள் கவனத்திற்கு
காலை 11 மணியில் இருந்து மாலை 04 மணி வரை பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேக மூட்டங்கள் திரண்டாலும் மழைக்கான வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸூம் குறைந்தபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸூம் பதிவாகக் கூடும்.
நேற்று அதிகபட்ச மழைப் பொழிவினை பெற்ற இடங்கள்
நீலகிரியில் உள்ள தேவலா 30 எம்.எம். மழை
தேனியில் உள்ள பெரியகுளத்தில் 10 எம்.எம். மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!