தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 397 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 42,000-ஐ தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 397 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 397 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 397 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினமும் மாநிலத்தில் பரிசோதனையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 30 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தனியார் மருத்துவனையில் 12 பேரும், அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 316 அக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிற அதே நிலையில், இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தொற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்படுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"