Advertisment

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heavy rain forecast for 8 districts in Tamil Nadu, chennai weather forecast, weather forecast, chennai rains, tamil nadu weatherman, கனமழை பெய்ய வாய்ப்பு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், weather in chennai for next 24 hour, chennai weather forecast 24 hours, Today weather, today district wise rainfall, Tirunelveli, Kanyakumari, Dharmapuri, Erode, thenkasi

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 1) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு அறிவுறுத்தி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டியில் 11 மி.மீ, திருப்புவனம் 10, குப்பணம்பட்டி, விளாத்திகுளம், பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு தீவிரமடைந்து மீண்டும் லேசாக மழை பெய்தது.

தற்போது கேரளாவில் மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளா மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் ஆகஸ்ட் 1 முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும்.

அதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 நாட்கள் கன மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். மழையினால் ஏற்படும் இழப்பை சரி செய்ய, கேரள அரசு, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Rain In Tamilnadu Kanyakumari Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment