தமிழ்நாட்டில் இன்று (நவ.25) முதல் 4 நாட்கள் நவ.25,26,27,28 ஆகிய 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
குறிப்பாக இன்று, நாளை டெல்டா பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்டா பகுதிகளில் இன்று (நவ.25) இரவு தொடங்கி மழை பெய்யும். 26, 27ம் தேதிகளில் அதிகனமழை பெய்யக் கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 26, 27 தேதிகளில் மிக கனமழை பெய்யும். மேலும் 26-ம் தேதி தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை 26 மற்றும் 27ம் தேதிகளில் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. KTCC எனப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நிலவரம் குறித்து வெதர்மேன் காத்திருக்க வேண்டும் என சஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய மழை இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“